அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அரசுக்கு வாக்களித்தவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படுகின்றன

தற்போது மன்னார் மாவட்டத்தில் முக்கியமாக அரசியல் தலையீடுகள் இடம் பெற்று வருகின்றது. தற்போது மன்னாரில் இடம் பெற்று வருகின்ற நேர்முகத்தேர்வில் 600 இற்கு மேற்பட்டவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றது. குறித்த நியமனங்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.


வட மாகாண ஆளனரின் பிரதி நிதி மன்னாரில் இடம் பெற்று வரும் நேர்முகத்தேர்விற்காக வந்துள்ளார். அவரே தெரிவு செய்கின்றார். இவ்வாறு 600 பேரை தெரிவு செய்துள்ளார். 10 பேர் தமிழர் என்றால் ஒருவர் சிங்களவராக உள்ளார்.

அண்மையில் கமநல சேவை உதவியாளர்களுக்காண நியமனங்கள் வழங்கப்பட்டது. அதிலும் அரசியல் ரீதியாகவே நியமனம் வழங்கப்பட்டள்ளது. இப்படிப்பட்ட அநியாயங்களே தொடர்ந்து கொண்டு செல்கின்றது.
மன்னாரில் அரசுக்கு வாக்களித்தவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படுகின்றன Reviewed by NEWMANNAR on May 12, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.