அமைச்சர் றிஷாட் மன்னார் ஆயரை வைத்து போக்கிரித்தனமான அரசியலை நடத்துகின்றார்!

இவ்விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் மன்னார் ஆயர் இன வாதம், மதவாதம் இன்றி செயற்பட்டு வருகின்றார். தமிழ்,முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமையினை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இதற்காக சர்வமத அமைப்பை உருவாக்கி மதத்தலைவர்களை ஒன்றிணைத்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றார்.
ஆனால் அமைச்சர் றிஷாட் பதீயுதின் நாட்டில் இடம்பெறுகின்ற அரசியல் நிகழ்வுகளின் போது முஸ்ஸிம் மக்கள் அதிகம் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இனவாதத்துடன் நடந்து கொள்கின்றார்.
1990 ம் ஆண்டு வடக்கு முஸ்ஸிம் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் சொப்பிங் பாக்குடன் வெளியேற்றப்பட்டதாக அடிக்கடி கூறுகின்றார். இதனால் தமிழ் முஸ்ஸிம் மக்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை அறுந்துவிடும் நிலைக்கு வந்துள்ளது.
தனது எதிர்கால அரசியலுக்காக தமிழ் மக்களுடன் ஒரு போக்குடனும்,முஸ்ஸிம் மக்களுடன் வேறு ஒரு வேசத்துடனும் அமைச்சர் செயற்படுகின்றார்.
ஆனால் 1990 ம் ஆண்டு முஸ்ஸிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட கசப்பான சம்பவம் தமிழ் சகோதரர்களுக்கு தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
வெளியேற்றப்பட்ட முஸ்ஸிம் மக்கள் தொடர்பிலும் அவர்களுடைய நீதியான மீள் குடியேற்றம் தொடர்பிலும் மன்னார் ஆயர் உயர் மட்டங்களிலில் வலியுறுத்தி வருகின்றமை யாவரும் அறிந்த விடயம்.
தம்புள்ளையில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து மன்னார் மாவட்ட முஸ்ஸிம் மக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத அமைச்சர் றிஷாட் பதீயுதீன் மன்னார் ஆயர் தொடர்பில் இனவாதப் போக்குடன் பேசுகின்றமை போக்கிரித்தனமான அரசியலையே காட்டி நிற்பதாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆனால் தனது அரசியலுக்காக ஒட்டு மொத்த கத்தோலிக்க மக்களும் கடவுளுக்கு சமனாக மதித்து வரும் மன்னார் ஆயர் தொடர்பில் பேசுவதற்கு அமைச்சர் றிஷாட் பதீயூதின் அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும், மன்னார் ஆயர் றிஷாட் பதீயூதின் போன்று போக்கிரித்தனமான அரசியல் ஒன்றையும் அவர் நடத்தவில்லை எனவும் மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் றிஷாட் மன்னார் ஆயரை வைத்து போக்கிரித்தனமான அரசியலை நடத்துகின்றார்!
Reviewed by NEWMANNAR
on
May 14, 2012
Rating:

No comments:
Post a Comment