அண்மைய செய்திகள்

recent
-

வயிற்றோட்டம் காரணமாக மன்னாரில் 80இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி

மன்னார் நகரின் மூர்வீதி, சின்னக்கடை, உப்புக்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் வயிற்றோட்டம் பரவிவருகின்றன.  வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பொதுவைத்தியசாலையிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும்  இவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் எனவும்  அவர் கூறினார்.


இவ் வயிற்றோட்டம் குறித்து பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் கொதித்தாறிய நீரைப் பருகுமாறும் ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் வாங்கும் உணவு வகைகள் குறித்து கவனத்தைச் செலுத்துமாறும்  பொதுமக்களிடம், வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.குணசீலன் கேட்டுக்கொண்டுள்ளார். 

அத்துடன், வயிற்றோட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் மன்னார் நகரில் நேற்று அறிவிப்பு செய்யப்பட்டது. 

மன்னாரில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் நீரில் ஏதேனும் இரசாயனப் பதார்த்தங்கள் கலந்துள்ளனவா என்பது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி பரிசோதனை மேற்கொண்டதுடன், குடிநீரின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக நேற்று கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 
வயிற்றோட்டம் காரணமாக மன்னாரில் 80இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Admin on May 13, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.