அண்மைய செய்திகள்

recent
-

நேற்று நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான கூட்டத்தில் இருந்து..

நேற்று ( 4.05.2012) காலை 10 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அனர்தமுகாமைத்துவ பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அரசாங்க அதிபர் திரு சரத் ரவீந்திர தலைமையேற்று நடாத்தியிருந்தார.


இதில் திரு. ரியாஸ் முகமட் உதவிப் பணிப்பாளர் அனர்த்த முகாமைத்துவம் அவர்கள் அங்கு சமூகமளித்த நிறுவனங்களிடமிருந்து அவர்களின் அனர்த முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கான செயற்பாடுகள் பற்றி கேட்டறிந்ததோடு, மன்னார் மாவட்டத்தில் தொண்டர்கள் பலர் அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமாக பாடசாலை மட்டத்தில் மாத்திரமல்லாமல் சமூக மட்டங்களிலும் பயிற்றுவிக்கப்ட்டுள்ளமையினால் அதுபற்றிய தகவல்களை சில நிறுவனங்கள் தந்துள்ளமையையும் இன்னும் பல நிறுவனங்கள் அது பற்றிய தகவல்களை தனக்கு சமர்பிக்கவில்லை என்னதனையும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் கூட்டத்தில் மாவட்டத்தின் அனர்தம் சம்பந்தமான இவ்வாண்டிற்கான வருட திட்த்தை இந்நிறுவனங்களின் உதவியுடன் தீட்டவுள்ளதாகவும் அரசாங்க அதிபார் திரு. சரத் ரவீந்திர அவர்களுக்கு விளக்கினார். இத்திட்டமிடலானது எதிர்வரும் 22ம் திகதி கரலை 9 மணிக்கு நடாத்துவதாக தீர்மாணிக்கப்பட்டதுடன் அரசாங்க அதிபர் சுகாதார சம்பந்தமான செயற்றிட்டங்கள் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுமிடத்து அவற்றை பிராந்தி சுகாதார பணிமனையுடன்(RDHS) கலந்தாலோசிப்பதன் வாயிலாக மிகவும் திறம்பட செய்யமுடியும் என தெளிவுபடுத்தினார்.


திரு. ரியாஸ் முகமட் அவர்கள் தன்னிடம் பல்கலைக் கழக மாணவர்கள் தமது பட்டப்படிப்பு சம்பந்தமாக தரவுகளை எதிர்பார்த்து வரும் சமயங்களில் தான் மாவட்டம் சம்பந்தமான தகவல்களை அளிப்பதாகவும் அதேவேளை சில நிறுவனங்கள் தனக்கு தகவல்களை தந்திருக்காத சமயம் அத்தகவல்கள் அந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு சென்றடையாத நிலை காணப்படுவதாகவும் தெளிவுபடக் கூறினார்.

இக்கூட்த்தில மேலதிக அரசாங்க அதிபர் உட்பட PRACTICAL ACTION, செஞ்சிலுவைச் சங்கம்,SEVALANKA, Offer, UNDP,வாழ்வுதயம், மற்றும் World Vision போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தின் நலன் கருதி; அனர்த்த செயற்படுகளில் சமூகங்களின பங்களிப்பானது மிகப்பிரதானமானது என்பதை இக்கூட்டமானது விளக்கியுள்ளதுடன் அனர்தங்களுக்கு நாம் எப்போதும் தயாரக இருக்கவேண்டும் என்பதையும் நினைவுபடுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான கூட்டத்தில் இருந்து.. Reviewed by NEWMANNAR on May 05, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.