மன்னார் மாவட்டமும் அனுராதபுர மாவட்ட தொல்லியல் ஆய்வு எல்லைக்கு உட்பட்டதாம்: திருக்கேதீச்சரம் ஆலயப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்
திருக்கேதீச்சரம் ஆலயப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்:-
சர்ச்சைக்குரிய மன்னார் பாலாவி திருக்கேதீச்சரம் ஆலயப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரி விண்ணப்பம்
இது தொடர்பாக
அனுராதபுரத்தில் தொழிற்பட்டுவரும் தொல்லியல் ஆய்வு திணைக்களம் புதிய அறிவிப்பொன்றை அப்பகுதி பிரதேச செயலருக்கு விடுத்திருக்கின்றது.
கடந்தகால தொல்லியல் ஆய்வுகளின் பிரகாரம் மன்னார் மாவட்டமும் அனுராதபுர மாவட்ட தொல்லியல் ஆய்வு எல்லைக்கு உட்பட்டதாகவே மன்னார் மாவட்டமும் இருந்து வருவதாகவும் அந்த வகையில் மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பௌத்த விகாரை அமைப்பதற்கான விண்ணப்பம் பிரதேச செயலரிடம் கடந்த ஜனவரி மாதம் கையளிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
தற்போது மன்னார் மாவட்டத்தை சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் முழுமையான வேகத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே மன்னார் மாவட்ட பௌத்த சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. பல பௌத்த பிக்குகள் மன்னாரில் தற்போது முகாமிட்டுள்ளனர். புத்தர் பரிநிர்வாணம் அடைந்த 2600 ஆம் ஆண்டு நிகழ்வுகள் மன்னாரில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடாகியிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே அனுராதபுரத்தில் தொழிற்பட்டு வரும் தொல்லியல் திணைக்களம் மன்னார் மாவட்டமும் அதன் தொல்லியல் எல்லைக்கு உட்பட்டதாகவே இயங்குவதாக தெரிவித்துள்ளது.
இதனால் திருக்கேதீஸவரப் பகுதியில் பௌத்த விகாரைகள் அமைந்திருப்பதற்கான காரணிகள் இருப்பதாகவும் அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் பௌத்த விகாரை அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என விண்ணப்பம் அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்தி....
மன்னார் திருக்கேதிஸ்வர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்து ! - புத்தர் சிலை அகற்றப்படுமா ???
மன்னார் மாவட்டமும் அனுராதபுர மாவட்ட தொல்லியல் ஆய்வு எல்லைக்கு உட்பட்டதாம்: திருக்கேதீச்சரம் ஆலயப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்
Reviewed by NEWMANNAR
on
May 05, 2012
Rating:

No comments:
Post a Comment