அண்மைய செய்திகள்

recent
-

தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி சாதனை இலக்கை நோக்கி இளைய சமுதாயம் முன்னேற வேண்டும்

வீட்டுச் சமயலில் இருந்து விண்வெளிப் பயணம் வரை இன்று விஞ்ஞானத்தின் வியக்கவைக்கும் வளர்ச்சி காணப்படுகின்றது. இன்றைய நவீன விஞ்ஞான உலகில் ஒருவர் தன்னை நிலைநிறுத்த வேண்டுமாயின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவசியமாகும். தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி சாதனை இலக்கை அடைந்தவர்தான் உலகத்தின் பணக்காரர் வரிசையில் உச்சியில் நிற்கும் பில் கேட்ஸ்.
தொடர்ந்து 12 ஆண்டுகளாக உலகின் முதலாவது பணக்காரராக பில் கேட்ஸ் வலம் வந்துகொண்டிருக்கிறார். இன்றைய இளைய சமுதாயம் இத்தகைய சாதனை இலக்கோடு பயணிக்க வேண்டும்.

வெறும் கனவுகள் மட்டும் இருந்தால் போதாதுளூ அக்கனவை அடைய விடாமுயற்சியும் வேண்டும். தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி சாதனை இலக்கை நோக்கி இளைய சமுதாயம் முன்னேற வேண்டும் இவ்வாறு மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனரும், மன்னா பத்திரிகையின் ஆசிரியரும், மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமாகிய அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார். கடந்த முதலாம் திகதி (01.05.2012) மன்னாரில் ஸ்ரார் றீஜன்ற் இன்ரநசனல்( Star Regent International (pvt) Ltd) என்ற கணனி மற்றும் ஆங்கில கற்கை நெறிக்கான கல்லூரியின் திறப்புவிழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்;போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். இத்தொழில் நுட்பக் கல்லூரியைத் திறந்துவைத்து உரையாற்றிய அடிகளார் அங்கு மேலும் முகூறியதாவது.

 கணனி வித்தகர் என்று உலகத்தால் போற்றப்படுகின்ற பில் கேட்ஸ் மைக்ரோ சொவ்ற் (Micro Soft) என்ற நிறுவனத்தின் உரிமையாளர். ஒருவர் எந்தக் கணனி பயன்படுத்தினாலும் சரி எனது ஒப்பறேற்றிங் சிஸ்ரம் (Operating System) இல்லாமல் எந்தக் கணனியும் எதிர்காலத்தில் இயங்க முடியாது என்று தன்னம்பிக்கையோடு உறுதிபடக் கூறியவர். ஊடை மனிதனுக்கு எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ அதுமாதிரி எல்லா கணனிகளுக்கும் வின்டோசை(Windows) சீருடையாக்கிக் காட்டுவேன் என்று சூழுரைத்ததோடு நில்லாமல் அதில் ஜெயித்தும் காட்டியவர். பில்கேட்ஸ் இந்த உலகத்தின் பணக்காரர் மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்தின் பணக்காரர். பில் கேட்ஸின் சொத்து இரண்டு இலட்சத்து எழுபது கோடி இந்திய ரூபாய். ஒரு நாளைக்கு ஒரு கோடி செலவழித்தாலும் அவர் சொத்தை செலவழிக்க 653 ஆண்டுகளாகும்.





 இன்றைய நவீன உலகில் ஒருவர் முன்னேற வேண்டுமாயின் அவர் இரண்டு விதமான அறிவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஒன்று ஆங்கில அறிவுளூ மற்றது கணனி அறிவு. இந்த இரண்டு அறிவையும் வழங்கும் ஒரு சிறப்பான நிறுவனமாக இந்த ஸ்ரார் றீஜன்ற் இன்ரநசனல் நிறுவனம் விளங்குகிறது. இந்த நிறுவனம் மன்னார் மக்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். இந்த நிறுவனம் வழங்கும் வாய்ப்புகளை இளைய தலைமுறையினர் நன்கு பயன்படுத்த வேண்டும்.
தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி சாதனை இலக்கை நோக்கி இளைய சமுதாயம் முன்னேற வேண்டும் Reviewed by NEWMANNAR on May 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.