மன்னார் - தலைமன்னார் பிரதான வீதிக் கிராமங்களில் முதலைகளின் நடமாட்டம்
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பல குளங்கள் மூடப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இக்குளங்களில் இருந்த முதலைகள் காடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இம்முதலைகள் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
இம்முதலைகள் காரணமாக கருஸல், ஓலைத்தொடுவாய் உள்ளிட்ட பல கிராம மக்கள பெரும் அச்சத்தில் உள்ளதுடன், இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியாது உள்ளனர்.
இக்கிராமங்களில் கோழி உட்பட கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படுவதினால் அவற்றை பிடித்து உண்பதற்காகவே தமது கிராமங்களுக்குள் முதலைகள் நுழைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பல குளங்கள் மூடப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இக்குளங்களில் இருந்த முதலைகள் காடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இம்முதலைகள் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
இம்முதலைகள் காரணமாக கருஸல், ஓலைத்தொடுவாய் உள்ளிட்ட பல கிராம மக்கள பெரும் அச்சத்தில் உள்ளதுடன், இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியாது உள்ளனர்.
இக்கிராமங்களில் கோழி உட்பட கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படுவதினால் அவற்றை பிடித்து உண்பதற்காகவே தமது கிராமங்களுக்குள் முதலைகள் நுழைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதிக் கிராமங்களில் முதலைகளின் நடமாட்டம்
Reviewed by Admin
on
May 01, 2012
Rating:
No comments:
Post a Comment