அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி எதிராக மகஜர்

தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் தகாத நடத்தையில் அதிருப்தி தெரிவித்து ஆஸ்பத்திரி பெண் ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருக்கு வியாழக்கிழமை மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இந்த வைத்திய அதிகாரி ஆஸ்பத்திரி பெண் தாதியர்களுடனும் பெண் சிற்×ழியர்களுடனும் தவறாக நடந்துகொள்ள முற்படுவதாக நீண்ட நாளாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது இவர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் இளம் பெண்களிடமும் இதுபோல் தவறாக நடந்துகொள்ள முற்படுவதுடன் அங்கச் சேஷ்டைகளிலும் ஈடுபடுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், இந்த டாக்டர் ஆஸ்பத்திரி பொறுப்பதிகாரி என்பதால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் நேற்று ஆஸ்பத்திரி ஊழியர்களும் பொது மக்களும் இணைந்து மகஜர் ஒன்றைத் தயாரித்து, மன்னாரில் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
இவருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மகஜரில் கோரப்பட்டுள்ளது.
இந்த டாக்டர் மிகுந்த அரசியல் செல்வாக்கு மிக்கவரெனவும் படையினர் மற்றும் பொலிஸாரின் செல்வாக்கைப் பெற்றவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி எதிராக மகஜர் Reviewed by NEWMANNAR on June 01, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.