ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கு புதிய இறங்கு துறைமுகம் அமைக்க இடம் ஒதுக்கீடு
மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கு மன்னார் - தலை மன்னார் பிரதான வீதியிலுள்ள தொழில்நுட்ப பூங்காவிற்கு பின்புறமாக இறங்கு துறைமுகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜேம்ஸ் சுதாகரன் தெரிவித்தார்.
மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடந்த 10 வருடங்களாக உப்புக்குளம், கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகத்தில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 250 தொழிளாலர்கள் இவ்வாறு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். குறித்த கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகம் இலங்கை துறைமுக கூட்டுஸ்தாபனத்திற்கு சொந்தமானதாகும்.
இந்நிலையில் அந்த திணைக்களத்தின் அனுமதியுடன் கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கும் கோந்தைபிட்டி பகுதினை அண்மித்த பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கும் இடையில் சில முரண்பாடுகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில் குறித்த மீனவர்களுக்கு வேறு இறங்கு துறைமுகம் ஒன்றை வழங்குவது தொடர்பிலான விசேட கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதி நிதிகள், மன்னார் மாவட்ட செயலாளர் எ.சரத்ரவீந்திர, மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டி மேல், ஜோசப்வாஸ் நகர் பங்குத் தந்தை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மன்னார் – தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள தொழில்நுடப பூங்காவிற்கு பின்புறமாக உள்ள கடற்கரை பகுதியில் யோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடற்தொழில் செய்வதற்கு இடம் ஒதுக்குதல் என அதிகாரிகளினால் தீர்மானிக்கப்பட்டது.

Reviewed by NEWMANNAR
on
June 29, 2012
Rating:

No comments:
Post a Comment