அண்மைய செய்திகள்

recent
-

எருக்கலம்பிட்டி முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருவதாக அமைச்சர் ஹக்கீம் உறுதி

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அம்மீனவர்களுக்கு நியாயத்தைப் பெற்று  தருவதாக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார்.

புத்தளம் நாகவில்லுவிலுள்ள எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம், மன்னார் எருக்கலம்பிட்டி மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் மீனவர் சங்க தலைவர் உள்ளிட்ட குழுவினரும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, எருக்கலம்பிட்டி கடலில் முஸ்லிம்களுக்கு சொந்தமான துறை பகுதியை மாற்று மதத்தை சேர்ந்த மீன்பிடி தொழிலார்கள் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் இதனால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். இதற்கு முறையாக நீதியை பெற்று  தருமாறு மீனவ சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

குறித்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர், குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் கடற்தொழில் அமைச்சருடனும் பேசுவதாக உறுதியளித்தார். அதுவரை மீனவர்கள் அமைதிகாக்குமாறும் மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.
எருக்கலம்பிட்டி முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருவதாக அமைச்சர் ஹக்கீம் உறுதி Reviewed by NEWMANNAR on June 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.