மின் கம்பிகளில் உப்பு படிவதன் காரணத்தினாலே மின் தடை ஏற்படுகின்றது: மின்சார சபை
மன்னார் -மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அதியுயர் மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகளில் உப்புக்காற்று படிவதன் காரணத்தினாலேயே திடீர், திடீர் என மன்னார் மாவட்டத்தில் மின்சாரம் தடைப்படுவதாக மன்னார் மின்னார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கடுமையான காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக மன்னார்-மதவாச்சி பிராதான வீதி மற்றும் மன்னார் பிரதான பாலத்தடி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அதியுயர் மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகளில் கடலில் உள்ள உவர்ப்பு நீருடம் கூடிய காற்று பட்டு குறித்த கம்பிகளில் உப்பாக படிகின்றது.
இதன் காரணமாக வயர்களில் உரசல்கள் காணப்பட்டு வெடித்து மின்தடை ஏற்படுகின்றது. குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் முகமாக அதியுயர் கருவிகள் மூலம் குறித்த மின் கம்பிகளை சுத்தம் செய்யும் பணியில் தற்போது மன்னார் மின்சார சபை ஈடுபட்டு வருவதாக மன்னார் மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மின் கம்பிகளில் உப்பு படிவதன் காரணத்தினாலே மின் தடை ஏற்படுகின்றது: மின்சார சபை
Reviewed by Admin
on
June 17, 2012
Rating:

No comments:
Post a Comment