அண்மைய செய்திகள்

recent
-

பயிர்ச்செய்கையை கைவிடும் நிலையில் மீள் குடியேற்ற மக்கள்

மன்னார் மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த மரக்கறி பயிர்ச்செய்கையை கை விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்வேறு கிராமங்களில் மரக்கறி வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.


குறிப்பாக கோவா, கத்தரி, பயிற்றை, கரி மிளகாய், தக்காளிப் பழம், கீரை, மிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய மக்கள் தமது கிராமங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்போது விளைச்சல் அதிகமாக கிடைத்தன. அரசாங்கத்தினாலும், அரச சார்பற்ற அமைப்புக்களினாலும் விதைகள் வழங்கப்பட்டதோடு பயிர்செய்கையை மேற்கொள்வதற்கு சகல விதமான வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.

தற்போது அரசாங்கம் இதனை கை விட்ட நிலையில் மீள் குடியேற்ற கிராமங்களில் அடிப்படை வசதியற்ற நிலையில் வாழ்ந்து வரும் அம்மக்கள் தற்போது அவர்கள் மேற்கொண்டு வரும் மரக்கறி வகை உற்பத்தியை பலப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

உரிய உரம் இன்மை, பயிர்ச்செய்கைக்கான நீர் தட்டுப்பாடு கட்டாக் காலிகளின் தொல்லை போன்றவற்றினால் தமது பயிர்ச்செய்கையை கை விட வேண்டிய நிலையில் உள்ளதாக அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பயிர்ச்செய்கையை கைவிடும் நிலையில் மீள் குடியேற்ற மக்கள் Reviewed by NEWMANNAR on June 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.