அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுமாதா ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மடு மாதா ஆலயத்தின் ஆடி மாத உற்சவம் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்தார்.
இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த உற்சவத்தில் வடக்கு மற்றும் தென்பகுதியினைச்சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாதம் 23 ஆம் திகதி ஆடித்திரு விழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.பின் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை 6 மணிக்கு தமிழிழும்,காலை 7 மணிக்கு சிங்களத்திலும்,மாலை 6 மணிக்கு இரு மொழிகளிலும் நற்கருணை ஆராதனைகள் இடம்பெறும்.

யூலை 1 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனை நடைபெற்று நற்கருனை சுற்றுப்பவனி இடம் பெறும்.

மறுநாள் 2 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருநாள் திருப்பலி நிறைவேற்றப்படும்.

திருநாள் திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுப்பார்கள் என மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்தார்.

இதேவேளை மடுத்திருவிழா காலங்களில் மடுப்பிரதேசங்களினுள் பயணிக்கும் பக்தர்கள் களியாட்ட நிகழ்வுகளை குறைககுமாறு மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை மேலும் தெரிவித்தார்.
மன்னார் மடுமாதா ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on June 21, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.