முசலி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட விலையுயர் மரங்கள் மீட்பு
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட காட்டுப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட ஒரு தொகுதி விலையுயர் மரங்களை நேற்று சனிக்கிழமை படைத்தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மரிச்சிக்கட்டி, பாலைக்குழி ஆகிய காட்டுப் பகுதிகளில் இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக வனத்துறையினர், பொலிஸ், இராணுவம் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன்போது குறித்த காட்டுப்பகுதிக்குள் பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த பெருமதி வாய்ந்த மரத்துண்டுகள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட மரத்துண்டுகளில் 26 பாலை மரங்கள், 2 முதிரை மரங்கள், 1 கருங்காலி, 6 ரெறுளு உள்ளிட்ட சுமார் 224 மரத்துண்டுகள் வெட்டப்பட நிலையில் காணப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்;.
குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவத்தின் 542 ஆம் படைப்பிரிவின் பிரிகேட் கொமாண்டர் விக்கும் லியனகே, மேஜர் ஜனக பெரேரா, மாவட்ட வன அதிகாரி சரத்குமார, வட்டார வன அதிகாரி தனிகாசலம், மன்னார் மாவட்ட பொஸிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. உதய ஹேமந்த, மன்னார் பொஸிஸ் நிலைய பொருப்பதிகாரி துசார தழுவத்த ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முசலி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட விலையுயர் மரங்கள் மீட்பு
Reviewed by Admin
on
June 10, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment