நல்ல வரவேற்பை பெற்றுள்ள மன்னார் முருங்கைகாய்
மன்னாரில்உற்பத்தி செய்யப்படுகின்ற முருங்கை காய்க்கு யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இங்கு,கருஷ்,தோட்டவெளி,தாராபுரம்,பேசாலை,தலைமன்னார் ஆகிய கிராமங்களில் பெருமளவில் நல்ல இன முருங்கை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.இவற்றில் தரமான விளைச்சல் கிடைப்பதுடன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
கிலோ ஒன்று 180-200 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதால் முருங்கை உற்ப்பத்தியாளர்கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.
மேலும் மன்னார் முருங்கைக்காய் வேறுமாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுவதால் மனாரில் முருங்கைக்காயக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.அத்தோடு அதன் விலையும் அதிகரித்துள்ளது.
முருங்கைக்காய்க்கு சிறந்துவிளங்கிய யாழ்பாணத்தில் சில வருடங்களாக அதன் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது இதனால் விலை வெகுவாக உயர்ச்சி அடைந்துள்ளது.தற்போது யாழ்ப்பாண நுகர்வோர் மன்னார் முன்கைகாயை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.யாழில் கிலோ ஒன்றிற்கு 400 ரூபா வரை விற்கப்படுகிறது.மரக்கறிகளின் விலை பரவலாக உயர்வாக காணப்படுகின்ற வேளைமுருங்கை காயின் விலை உச்சாணியில் இருப்பது குறிப்பிட தக்கது.
நல்ல வரவேற்பை பெற்றுள்ள மன்னார் முருங்கைகாய்
Reviewed by Admin
on
June 10, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment