நானாட்டான் பிரதேசத்தில் குவைத் நிவாரண அமைப்பு நிர்மாணித்த வீடுகள் மக்களிடம் கையளிப்பு
கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான குவைத் நாட்டின் துதுவர் யாகூப் யூசுப்-அல்-அதிக்கீ அதனை இன்று பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
ஜமாத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவு இந்த நிர்மாணப் பணிகளுக்கான திட்டத்தை நடை முறைப்படுத்தியது.
இந்த திறப்பு விழாவில் குவைத் நாட்டின் பிரபல சமூக சேவை சேவை மற்றும் நிவாரண அமைப்பின் தகுதியுடைய அதிகாரி பத்ர் அல்-சம்ரூக், ஜமாதே இஸ்லாமின் சமூக சேவை பிரிவின் பொறுப்பாளர் மௌலவி அப்துர் ரஹ்மான், நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ், பிரதேச சபை உறுப்பினர்களான சூசை மற்றும் சஹாப்தீன், ஒ.எச்.ஆர்.டீ. நிறுவன செயலாளர் எஸ்.எப்.எம். றமீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது இக்கிராமத்தில் மீள்குடியேறியுள்ள 108 குடும்பங்களில் முதல் கட்டமாக 42 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டதுடன், அவர்களுக்கான உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.
இலங்கைகாக குவைத் துதுவர் யாகூப் யூசுப் அல்-அதீக்கி, தமது விஜயத்தை நினைவு கூரும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தமது நாட்டின் தேசிய சின்னமொன்றையும் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் பிரதேசத்தில் குவைத் நிவாரண அமைப்பு நிர்மாணித்த வீடுகள் மக்களிடம் கையளிப்பு
Reviewed by NEWMANNAR
on
June 10, 2012
Rating:
No comments:
Post a Comment