அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேவன் பிட்டி மீனவ கிராமத்தில் அட்டை வளர்ப்பு விவகாரம்-இடைக்காலத்தடை விதிப்பு.


மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தில் அரசியல் வாதியின் செல்வாக்கின் மூலம் மேற்கொள்ளப்படவிருந்த தனியார் அட்டை வளர்ப்பு வேலைத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவன் பிட்டி புனித சூசையப்பர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடையம் தொடர்பில் தெரிய வருகையில்

தேவன் பிட்டி கிராமத்தில் குறித்த கிராம மக்களும்அலய சபையும் இணைந்து குறித்த பிரதேசத்தில் உள்ள கடற்பகுதியில் பாரிய அட்டை வளர்ப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ள இருந்தனர்.
இந்த நிலையில் எமது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை பகடைக்காயாக பயண்படுத்தி வெளியூரைச் சேர்ந்த வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு தனி நபர் திணைக்களங்கள்அதிகார சபைகள்அமைச்சுக்கள் மூலம் அனுமதியைப் பெற்று எமது கிராமத்தில் அட்டை வளர்ப்பை மேற்கொள்ள சகல வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் குறித்த தனி நபரின் இவ் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் உடனடியாக எமது கிராமத்திற்கு வந்த மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் குறித்த வேளைத்திட்டம் கடற்தொழில் அமைச்சரினால் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிச் சென்றார்.இந்த நிலையில் குறித்த வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜேம்ஸ் சுதாகரன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து எமது கிராம மக்களை வழிப்படுத்தினர்.
அவர்களுடைய உதவி எமது கிராமத்திற்கு பெரும் பங்கினை வகித்துள்ளது.
தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள போதும் குறித்த வேளைத்திட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என குறித்த கிராம மக்களும்தேவன்பிட்டி புனித சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் உரிய அதிகாரிகளிடம் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
மன்னார் தேவன் பிட்டி மீனவ கிராமத்தில் அட்டை வளர்ப்பு விவகாரம்-இடைக்காலத்தடை விதிப்பு. Reviewed by NEWMANNAR on June 02, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.