நகரசபை அதன் சேவையினை திறம்பட செய்வதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.-படங்கள் இணைப்பு
மன்னார் நகரசபையானது அதன் சேவைகளில் ஒன்றாக மக்களின் வீட்டு கழிவுகளையும்அகற்றி வருகின்றது.இதற்காகவே ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்குகின்றது.
ஆனால் குப்பைகளை அகற்றும் சேவையில் உள்ளோர் அவர்களின் பணியினை திறன்பட செய்யவில்லை என மன்னார் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதாவது குப்பைகளை வீடுகளில் இருந்து சேகரிக்கும் வண்டியானது அக் குப்பைகளை பிரதான பாதைகள் மற்றும் உள் வீதிகளில் கொட்டி செல்வதாக மக்கள் கூறுகின்றனர்.அனால் இது பற்றி ஊழியர்கள் கவனம் செலுத்துவதில்லை என்றும் இது தொடர்பாக மக்கள் முறைப்பாடு செய்தும் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற அவர்கள் வருவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமன்றி இத் தவறினையே அவர்கள் மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர் என்றும்,பாதைகள் மேலும் மாசடைகின்றன என்றும் அறியப்படுகிறது.எனவே உரிய அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மக்கள் நகரசபை தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
புகைப்படம் மற்றும் தகவல்- கமல்ராஜ்
நகரசபை அதன் சேவையினை திறம்பட செய்வதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
June 02, 2012
Rating:

No comments:
Post a Comment