2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு காணாமல் போயிருந்த மன்னார் இளைஞன் இன்று றாகம வைத்தியசாலையில் கோமா நிலையில்...
றாகம வைத்தியசாலையில் கோமா மயக்க நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு காணாமல் போயிருந்தவரென கண்டறியப்பட்டுள்ளது.
மன்னார் இலுப்பக்கடவையினை சேர்ந்த முத்துராசா தில்ருக்ஸன் (வயது 28) என அவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.
47 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயான முத்துராசா ரீசா தனது மகன் டில்ருக்சனை நேற்று றாகம வைத்தியசாலையில் பார்வையிட்டதாக தெரிவித்தார். தனது மகன் டில்ருக்சன் 2006ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு போனவர் என்றும் 3 வருடங்களின் பின் தமது ஊரான இலுப்பைக் கடவைக்கு திரும்பியவர் என்றும் தெரிவிக்கும் தாயார் அவர் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு புறப்படுவதற்காக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்தில் இருந்து மன்னார் அரசகட்டுப்பாட்டு பகுதியான மன்னார் நகரப்பிரதேசத்துக்கு படகு மூலம் புறப்பட்ட டில்ருக்சனை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இவருடன் 2 வருடங்கள் தொடர்பு இருந்த போதும் பின்னர் அவரது தொடர்பு அற்றுப் போனதாகவும் இப்போ ஊடகங்களில் பெயர் வந்ததனை அடுத்து தான் றாகம வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
மொட்டை அடித்து கோமாநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள டில்ருக்சனுக்கு அருகில் செய்ய முடியாத அளவிற்கு மணம் இருப்பதாக கூறும் தாயார் அவரை வவுனியாவுக்கு மாற்றும்படி கோரியிருக்கிறார்.
தனது மகன் வெளிநாடு சென்று திரும்பி வந்து மீண்டும் சவுதிக்கு போக புறப்பட்ட போது கடற்படையால் கைதான பின் இப்போ அவர் புலிகளில் முக்கியமானவர் என பாதுகாப்பு தரப்பினர் கூறுவதாக ரீசா தெரிவித்துள்ளார்.
தற்போது 29 வயதை அடைந்துள்ள டில்ருக்சன் கைதாகும் போது 26 வயது நிரம்பியவர் என்றும் அவர் இன்னும் திருமணம் முடிக்க வில்லை என்றும் தாயார் ரீசா தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு காணாமல் போயிருந்த மன்னார் இளைஞன் இன்று றாகம வைத்தியசாலையில் கோமா நிலையில்...
Reviewed by NEWMANNAR
on
July 09, 2012
Rating:

No comments:
Post a Comment