நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு இன்று (20) நடைபெற்றது.
சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான 'கமலாலயத்தில்' இச்சந்திப்பு இடம்பெற்றது.
இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்தது.
இதன்போது தமிழ்த் தேசியப் பேரவையினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:
தமிழர் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தி, சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வலியுறுத்துமாறு இந்திய மத்திய அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசை வலியுறுத்துவதற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவராகிய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு
Reviewed by Vijithan
on
December 20, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 20, 2025
Rating:


No comments:
Post a Comment