மன்னார் நீதிமன்றத்தில் விசாரணை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைப்பு _
மன்னார் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் குறித்த விசாரணை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணைகளின் பின்னரே யாரைக் கைது செய்வது என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்தார்.
மன்னார் மஜிஸ்திரேட் நீதிமன்றம் தாக்கப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்தும் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.
மன்னார் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவானுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த அமைச்சர் கைது செய்யப்படுவாரா என பொலிஸ் பேச்சாளரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
மன்னார் மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட குழுவினரால் தாக்கி சேதமாக்கப்பட்டது. இச்சம்பவத்தின் போது அமைச்சரொருவரும் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இருந்தார் எனக் கூறப்படுகிறது.
மன்னார் நீதிமன்றத்தில் விசாரணை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைப்பு _
Reviewed by Admin
on
July 22, 2012
Rating:

No comments:
Post a Comment