இந்தியா ஊடாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 8 பேர் படகுடன் மன்னாரில் கைது
படகுமூலம் இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் இலங்கையர் எட்டுப்பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 3 பெண்கள், ஆண்கள் இருவரும் அடங்குகின்றனர். இவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றபோது கிழக்கு கடற்பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 53 பேரை ஆகஸ்ட் 6 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா ஊடாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 8 பேர் படகுடன் மன்னாரில் கைது
Reviewed by NEWMANNAR
on
July 24, 2012
Rating:

No comments:
Post a Comment