நிமலரூபனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு – வவுனியாவில் இன்று இறுதிக் கிரியை
படுகொலை செய்யப்பட்ட வவுனியா சிறைக்கைதி கணேசன் நிமலரூபனின் சடலம் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் வவுனியா நெளுக்குளம் இந்து மயானத்தில் இவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இறுதிக் கிரிகைகளில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் நிமல்கா பெர்னாண்டோ, சிறிதுங்க ஜெயசூரிய உட்பட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிமலரூபன் அங்கு இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். இவரது சடலத்தை நீர்கொழும்பு பிரதேச ௭ல்லைக்குள் நல்லடக்கம் செய்ய வேண்டுமென பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கெதிராக நிமலரூபனின் பெற்றோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோது சடலத்தை வவுனியாவில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு நிபந்தனையுடன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிணங்கவே நேற்று திங்கட்கிழமை சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பிலிருந்து நேற்று இரவு சடலத்தை வவுனியா கொண்டு செல்ல ஏற்பாடாகியிருந்தது. ___

Reviewed by NEWMANNAR
on
July 24, 2012
Rating:

No comments:
Post a Comment