மன்னார் நீதவான்,5 வழக்குரைஞர்களிடமும்வாக்குமூலம் பதிவு
குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த விசேட குழுவினர், மன்னார் நீதவானிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொலைபேசியூடாக மன்னார் நீதவானை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவே வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பொலிஸ் அத்தியட்சகரொருவரின் தலைமையிலான அணியொன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றும் 5 வழக்குரைஞர்களிடமும் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்னமும் வாக்குமூலம் பதிவுசெய்யவில்லையென குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் வாக்குமூலம் பின்னர் பதிவுசெய்யப்படுமெனவும் அத்தகவல்கள் குறிப்பிடுகின்றன
மன்னார் நீதவான்,5 வழக்குரைஞர்களிடமும்வாக்குமூலம் பதிவு
Reviewed by NEWMANNAR
on
July 24, 2012
Rating:

No comments:
Post a Comment