அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கருத்தமர்வு

கடந்த ஞாயிற்றுக் கிழமை (15.07.2012) மன்னார் ஞானோதயத்தில் காலை 10.00 மணி தொடக்கும் மாலை 4.00 மணி வரை இடம்பெற்ற இக்கருத்தமர்வில் மன்னாரில் உள்ள சர்;வமதத் தலைவர்கள், சிறுவர் உரிமைகளோடு தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள், கல்வித்துறை, சட்டத்துறை, சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பையும் சார்ந்த 100 பேர் கலந்துகொண்டனர்.எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா என குழந்தைகள் மௌனக் குரல் எழுப்புகின்றனர்.



இக்கருத்தமர்வின் முக்கிய ஏற்பாட்டாளராகிய அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது கூறியதாவது, சிறுவர் துஷ்பிரயோகம் என்பது இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஓரு பாரிய சமூக மற்றும் மனிதாபிமானப் பிரச்சினையாகும்.

 ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், பொலிஸ் நிலையங்களுக்கு, நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்படும் சம்பவங்கள் பத்து வீதமானவையே. மிகுதி தொண்ணூறு வீதமான சம்பவங்கள் வெளிவருவதில்லை. பல்வேறு காரணங்களுக்காக அவை மூடி மறைக்கப்படுகின்றன. நமது எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான சிறுவரை மிகமோசமாக – மிக வேகமாகப் பாதித்துவரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட மட்டத்தில் பரந்த அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கருத்தமர்வின் நோக்கமாகும். சிறுவர் துஷ்பிரயோகம் என்னும் கொடிய தீமையை, ஆபத்தை இல்லாதொழிப்பதற்கு சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் தத்தமது சக்திக்கு உட்பட்ட வகையில் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும் என்றார்.


பொருள், பண்டம், காணி, பூமி என்று நமக்கு பல செல்வங்கள் இருக்கலாம். ஆனால் எல்லாச் செல்வங்களிலும் மேலான செல்வம் குழந்தைச் செல்வமாகும். குழந்தைகள் இறைவனின் மிகப்பெரும் கொடையாகும். பாதுகாப்பற்ற நிலையில், முற்று முழுதாக மற்றவர்களில் தங்கி வாழும் இக்குழந்தைச் செல்வங்கள் இன்று பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்.

 குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய செய்திகள்  என்றுமில்லாதாவாறு இன்று மிகப்பெரும் அளவில் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா என்று இந்த அப்பாவிக் குழந்தைகள் மௌனக் குரல் எழுப்புகின்றனர். குரலற்ற இக்குழந்தைகளுக்காக குரல் எழுப்புவது, எல்லா மட்டங்களிலும் இக்குழந்தைகளின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது சமூக அக்கறையுள்ள அனைவரது கடமையாகும் என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.

மன்னார் சர்வமதப் பேரவையும் நெய்வர் என்ற அமைப்பும் இணைந்து நடாத்திய சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.










மன்னாரில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கருத்தமர்வு Reviewed by Admin on July 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.