முள்ளிக்குளம் மக்கள் ஏமாற்றம் _
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அப்பகுதியில் உள்ள மலங்காடு எனும் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அந்த மக்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தித்து உதவிகளை வழங்குவதாகக் கூறிய போதும் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணி வரை அம்மக்கள் அமைச்சரின் வருகையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளதாக மலங்காடு பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள் வாழ்ந்து வரும் முள்ளிக்குளம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்த முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய மலங்காடு பகுதியில் உள்ள காடுகளுக்குள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்ற நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை முசலி பிரதேச சபையின் தலைவரால் குறித்த மலங்காடு பகுதியில் உள்ள மக்களை அமைச்சர் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சகல வகையிலும் பாதிக்கப்பட்ட குறித்த மக்கள் அமைச்சரின் வருகையை எதிர்பார்த்துக்காத்து இருந்துள்ளனர்.
இரவு 9 மணியாகியும் குறித்த மலங்காடு கிராமத்திற்கு அமைச்சர் செல்லவில்லை.
இந்த நிலையில் ஒன்று கூடியிருந்த அந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் சற்று தொலைவில் உள்ள காயக்குழி என்ற கிராமத்திற்கு இரவு 8 மணியளவில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதோடு அந்தக் கிராமத்தில் உள்ள 75 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா பணமும்,1 ஏக்கர் விவசாயக் காணியும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ___

Reviewed by NEWMANNAR
on
July 16, 2012
Rating:

No comments:
Post a Comment