சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாலை வேளைகளில் 06.00 மணியின் பின்னராக பெருந்தொகையில் படையெடுத்து வரும் நுளம்புகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு புல்லெண்ணை தடவுதல், புகை போடுதல் உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
எவ்வாறெனினும் இந்நடவடிக்கைகள் இவற்றைக் கட்டுபடுத்துமளவிற்கு இருக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இரவில் படிப்பதற்கு அமரும் மாணவர்கள் நுளம்பு கடிப்பதாக கூறி நேர காலத்துடனேயே வலைகளுக்குள் முடங்குகின்றனர். சில மாணவர்கள் வலைகளுக்குள் இருந்து படிப்பதிலும் ஈடுபடுகின்றனர். இரண்டாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கையில் மாணவர்களுடைய பெற்றோர்கள் சுகாதார அதிகாரிகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இது தொடர்பில் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த ஒருவருடத்திற்கு முன்பதாக குறைந்துது ஆறு மாதங்களுக்கு ஒரு தடவையேனும் நுளம்பெண்ணை விசிற வருவார்கள் எனவும் ஆனால் தற்போது அவர்களுடைய பிரசின்னத்தை தமது பகுதிகளில் காண முடிவதில்லை எனவும் முறைப்படுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் டெங்கு நுளம்புகளின் தாக்கத்தை அறவே ஒழிப்போம் எனக் கூறிக்கொள்ளும் அதிகாரிகள் இவ்வாறான விடயங்களில் கூடிய கவனமெடுத்து செயற்பட்டு எதிர் காலத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்புகளை இயன்றளவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.
-வி ஆர். -
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
Reviewed by NEWMANNAR
on
July 16, 2012
Rating:

No comments:
Post a Comment