நீதவான் அச்சுறுத்தப்பட்டமைக்கு நீதி அமைச்சர் ஹக்கீம் கண்டனம்
மன்னார் நீதவான் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை வன்;மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையிலும் நீதி அமைச்சர் என்ற வகையிலும் குறித்த சம்பவத்தினை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"குறித்த சம்பவம் தொடர்பில் சட்டத்திரணிகள் சங்கத்தின் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தினேன். அத்துடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடன் நேரடியாக மன்னாருக்கு விஜயம் செய்து சட்டத்தரணிகளுடன் பேச்சு நடத்தவிருந்தேன்" என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்
"எனினும் சட்டத்திரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் அங்கு செல்ல முடியாமலுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி, சுமுகமான நிலையிலை உருவாக்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீதவான் அச்சுறுத்தப்பட்டமைக்கு நீதி அமைச்சர் ஹக்கீம் கண்டனம்
Reviewed by NEWMANNAR
on
July 20, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment