அண்மைய செய்திகள்

recent
-

நீதிமன்ற அவமதிப்பை கண்டித்து பல நீதிமன்ற சட்டத்தரணிகள் பகிஸ்கரிப்பு


மன்னார் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை கண்டித்து நேற்று புதன்கிழமை மன்னாரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்றத்தை தாக்கியமை அங்கிருந்த உடமைகளை சேதப்படுத்தியதாக தெரிவித்து வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா நீதிமன்ற முன்றலில் கூடிய சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'றிசாட்டே நீதித்துறையில் தலையிடாதே, றிசாட்டே சட்டத்தை கையில் எடுக்காதே, சட்டவாதிகளுக்கு வழிவிடு, சட்டத்தின் காவலுக்கு கல் எறிவதா?, நீதித்துறையை அச்சுறுத்திய அமைச்சரை கைது செய், அச்சுறுத்தாதே, அச்சுறுத்தாதே நீதிபதியை அச்சுறுத்தாதே' என்ற கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்டன் புனிதநாயகம் கருத்து தெரிவிக்கையில்,

"'நேற்றைய தினம் பெருமளவில் திரண்ட மக்கள் நீதிவானை தரக் குறைவாக பேசியதுடன் நீதியையும் களங்கப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு கல் எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற சான்றுப்பொருட்கள் அறைக்கு தீ வைத்துள்ளனர். புதிதாக கட்டப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் சயன அறைக்கும் அவரது அலுவலக அறைக்கும் கல் எறிந்துள்ளனர்.

இதன் காரணமாக மேல் நீதிமன்ற நீதிபதி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். எனவே இவ்வாறான சம்பவத்தை கண்டித்தும் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இடம்பெறக்கூடாது எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தை கண்டித்து சட்டத்தரணிகளும் நீதிமன்ற பணியாளர்களும் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் வழக்கு விசாரணைகளுக்கு வந்த மக்கள் சிரமத்தை எதிர்நோக்கினர். இதன்போது காலை 9.30 மணி முதல் 11.30 மணிவரை நீதிமன்றத்திற்கு முன் மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்வேறு பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் வவுனியாவில் இருந்து சட்டத்தரணிகள் குழு ஒன்று மன்னார் நீதிமன்றத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரை மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய நீதிமன்றத்தின் சட்டத்தரணிகளும் பணியாளர்களும் மன்னார் நீதிமன்றத்திற்கு ஆதரவு தெரிவித்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.


நீதிமன்ற அவமதிப்பை கண்டித்து பல நீதிமன்ற சட்டத்தரணிகள் பகிஸ்கரிப்பு Reviewed by Admin on July 19, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.