மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ் சட்டத்தரணிகளும் போராட்டம்.-படங்கள் இணைப்பு

அமைச்சர் ரிசாத் பதியூதீனால் மன்னார் நீதிவான் அச்சுறுத்தப்பட்டதற்கும் நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்டமையையும் கண்டித்தே இப் பணிப்புறக்கணிப்பில் சட்டத்தரணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் ரிசாத்தின் இச்செயலை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு அமைச்சர் ரிசாத் மற்றும் இதனோடு சம்பந்தப்பட்ட சகலருக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயத்தில் உரிய தீர்வு எடுக்கப்படாத வரையில் தமது போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நீதி அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் சட்டத்தரணிகளுக்கு ஆதரவாக யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை சட்டத்தரணிகளின் இப் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றைய தினம் யாழ்.நீதிமன்றச் செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்படதோடு நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரிசாத்தின் இச்செயலை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு அமைச்சர் ரிசாத் மற்றும் இதனோடு சம்பந்தப்பட்ட சகலருக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயத்தில் உரிய தீர்வு எடுக்கப்படாத வரையில் தமது போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நீதி அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் சட்டத்தரணிகளுக்கு ஆதரவாக யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை சட்டத்தரணிகளின் இப் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்றைய தினம் யாழ்.நீதிமன்றச் செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்படதோடு நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ் சட்டத்தரணிகளும் போராட்டம்.-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 19, 2012
Rating:

No comments:
Post a Comment