அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தினால் நடாத்தப்பட்டஉலக தொடர்பாடல் தின விழா-விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இளங்கலைஞர்கள்

உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உலக தொடர்பாடல் தினத்தை(World Communication Day) முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தினால் 'தொடர்பாடல் தின விழா' கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.06.2012) அன்று மாலை 6.30 மணிக்கு சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தின் திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது.
மையத்தின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்குத்தந்தை அருட்திரு. பி. யேசுறாஜா அடிகளார், மன். புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கலாபூசணம் திரு பறுநாந்து பீரிஸ், சமாதான நீதவான் திரு. சிந்தாத்துரை ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும்  இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

  இந்நிகழ்வின் வரவேற்புரையை சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் மத்திய குழு உறுப்பினர் திரு. அந்தோனிதாசன் பெனாண்டோ (ராதா) அவர்கள் நிகழ்த்தினார். இவ்விழாவில் மன் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் (தேசிய பாடசாலை) மாணவர்களால் 'தெருத்திண்ணை' என்ற சமூக நாடகமும், மன். புற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தினால் 'பாருள்ளே ஓர் வலிமை' என்ற கூத்துருவ நாடகமும் மேடையேற்றப்பட்டன.

 இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக தமிழ் நேசன் அடிகளாரை காப்பாளராகக்கொண்டு இயங்கும் தழல் இலக்கிய வட்டத்தினரால் 'தொடர்பாடலின் வளர்ச்சி சமூகத்திற்கு சாதகமே – பாதகமே என்ற தலைப்பில் பட்டி மன்றம் இடம்பெற்றது. இப்பட்டிமன்றத்திற்கு நடுவராக எழுத்தாளர் துறையூரான் (ஆசிரியர் திரு. சிவானந்தன்) அவர்கள் இருந்தார். பலவித நடன நிகழ்வுகள் இவ்விழாவை அலங்கரித்தன.

உலக தொடர்பாடல் தின விழாவின்போது சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தினால்
விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இளங்கலைஞர்கள்
  மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த பாடகி செல்வி அனோஜா அவர்களுக்கு 'கவிக்குயில்' என்ற விருதும், மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளரும், குறும்படத் இயக்குனருமான திரு. நிசாந்தன் அர்களுக்கு 'பல்துறை வித்தகன்' என்ற விருதும் வழங்கப்பட்டது.



 கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.06.2012) அன்று மாலை 6.30 மணிக்கு சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தில் இடம்பெற்ற உலக தொடர்பாடல் தின விழாவின்போதே இக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் சார்பில் மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள்  இக்கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருதுகளை வழங்கி வைத்தார்.

மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தினால் நடாத்தப்பட்டஉலக தொடர்பாடல் தின விழா-விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இளங்கலைஞர்கள் Reviewed by NEWMANNAR on July 11, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.