அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழ் நீதவானை நான் கண்டதே இல்லை அவரை எப்படி நான் அச்சுறுத்த முடியும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை ; ரிசாட் பதியுதீன்

மன்னார் நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையில்லை என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு உத்தரவினையடுத்து அவருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொடர்பு பட்டிருப்பதாக நீதவான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதனையடுத்தே மன்னார் நீதவான் அச்சுறுத்தலுக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மன்னார் நீதிமன்ற நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சனான தமிழ் நீதவானை தாம் சந்தித்ததே கிடையாது. அத்துடன் குறித்த நீதவானை கண்டதும் இல்லை, அவருடன் பேசியதும் இல்லை.
அவரை நான் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை.
எனினும் நீதிமன்ற வளாகத்தில் எமது ஆதரவாளர்கள் குழுமியிருந்ததாகவும், அதன் போதே காவல் துறையினர் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தினர்.
அத்துடன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் நான் மன்னாரிலேயே இருக்கவில்லை. சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டதன் பின்னரே மன்னாருக்கு விரைந்தேன்.
எவ்வாறெனினும், 1990 களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருப்பினும் மன்னாரில் தமிழ் சட்டத்தரணிகள் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர் அவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவானவர்கள். இதனால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு என்று சட்டத்தரணிகள் கிடையாது எனவும், அமைச்சரின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் தமிழ் நீதவானை நான் கண்டதே இல்லை அவரை எப்படி நான் அச்சுறுத்த முடியும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை ; ரிசாட் பதியுதீன் Reviewed by NEWMANNAR on July 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.