மன்னார் நகர சபையில் நிறைவேறியது நீதிமன்ற தாக்குதல் தொடர்பான கண்டணதீர்மானம்

மன்னார் நகர சபையின் மாதாந்த கூட்டம் இம்மாதம் 19ம்திகதிநகரசபையின் தலைவர். எஸ். ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானம்நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
நகரசபையின் உறுப்பினர் ரெட்னசிங்கம் குமரேஷ் மன்னார் நீதிமன்றம்தாக்கப்பட்டமை தொடர்பில் முன்மொழிவை வைத்து உரையாற்றுகையிலே மேற்படி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அமைதி வழியில் என சொல்லி தொடங்கிய போராட்டம் வண்முறையில்மடிவடைந்ததற்கு சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே காரணம் என தெரிவித்திருக்கின்றார்.
இரண்டு மீனவ சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட இந்த சர்ச்சை; பேசிதீர்த்திருக்கவேண்டும் அல்லாவிடில் பேசித்தீர்க்கக்கூடியவர்களை அணுகி தீர்ப்பதற்கு முயற்சிகளைமெற்கொண்டிருக்க வேண்டும்.
அதையும் தாண்டி இவ்விடையம் தற்போது நீதிமன்றம் வரையில்சென்றிருக்கின்றது.
இதுவிடயம் தொடர்பில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இரு சமூகங்களும்கடைப்பிடித்திருக் வேண்டும். குறித்த நீதிமன்ற கட்டளைகள் ஏற்க முடியாவிட்டால் அதனைமேன்முறையீடு செய்திருக்கவேண்டும்.
ஆனால் அதை விடுத்து நீதியையும் நீதிமன்றையும் அவமதித்தும்நீதவானை விமர்சித்தும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நீதிமன்றத்தையே தாக்கும்அளவிற்கு சென்றிருக்கின்றது.
மன்னார் நகர சபையில் நிறைவேறியது நீதிமன்ற தாக்குதல் தொடர்பான கண்டணதீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2012
Rating:

No comments:
Post a Comment