ஜோசவாஸ் நகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி வடமாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தலில் 1ம் இடத்தையும் நீளம் பாய்தலில் 4ம் இடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு- பட இணைப்பு
அண்மையில் நடைபெற்ற வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராசா விஜிந்தினி என்பவர் உயரம் பாய்தலில் முதலாவது இடத்தையும் நீளம் பாய்தலில் நான்காவது இடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் விடத்தல் தீவு தூய யோசவாஸ் மகாவித்தியாலத்தில்; தனது ஆரம்ப கல்வியையும் தற்பொழுது ஜோசவாஸ் நகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தோட்டவெளியில் 9ஆம் தர வகுப்பிலும் கல்வி கற்று வருகிறார். இவர் ஏற்கனவே 2008, 2009, 2010, 2011 ஆகிய வருடங்களில் வடமாகாணப் போட்டியில் உயரம் பாய்தலில் முதலாம் இடத்தைப் பெற்றதோடு 2010ல் 200mஓட்டப்பேர்டியில் 2ம் இடத்தையும் பெற்று மேற் குறிப்பிட்ட வருடங்களில் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை இவரது பெற்றோர், பயிற்றுவித்த ஆசிரியர் அருள் ரூபன், பாடசாலை அதிபர் யோகராஜா, ஆசிரியர்கள், சக மாணவர்கள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் மென்மேலும் தனது முயற்சியில் முன்னேற வாழ்த்துகின்றனர். அத்துடன் இச்செய்தியை வெளியீடு செய்த புதிய மன்னார் இணையத்தளத்துக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர் விடத்தல் தீவு தூய யோசவாஸ் மகாவித்தியாலத்தில்; தனது ஆரம்ப கல்வியையும் தற்பொழுது ஜோசவாஸ் நகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தோட்டவெளியில் 9ஆம் தர வகுப்பிலும் கல்வி கற்று வருகிறார். இவர் ஏற்கனவே 2008, 2009, 2010, 2011 ஆகிய வருடங்களில் வடமாகாணப் போட்டியில் உயரம் பாய்தலில் முதலாம் இடத்தைப் பெற்றதோடு 2010ல் 200mஓட்டப்பேர்டியில் 2ம் இடத்தையும் பெற்று மேற் குறிப்பிட்ட வருடங்களில் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை இவரது பெற்றோர், பயிற்றுவித்த ஆசிரியர் அருள் ரூபன், பாடசாலை அதிபர் யோகராஜா, ஆசிரியர்கள், சக மாணவர்கள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் மென்மேலும் தனது முயற்சியில் முன்னேற வாழ்த்துகின்றனர். அத்துடன் இச்செய்தியை வெளியீடு செய்த புதிய மன்னார் இணையத்தளத்துக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜோசவாஸ் நகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி வடமாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தலில் 1ம் இடத்தையும் நீளம் பாய்தலில் 4ம் இடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு- பட இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 11, 2012
Rating:
No comments:
Post a Comment