வடக்கில் கடற்தொழிலாளர்களின் பிரச்சனை தொடர்பாக மன்னாரில் கலந்துரையாடல்!
இந்திய இழுவைப்படகுகளின் தாக்கம் மற்றும் வடக்கு மீனவ சமூதாயம் தற்போது முகம் கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் ஏறபாட்டில் எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் கொலிடே விடுதியில் இடம் பெறவுள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கடந்த 15 வருடங்களாக இலங்கை வாழ் மீனவர்கள தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் தோட்டப்புற தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்புரி தேவைகளுக்காக செயற்பட்டு வருகின்றது.
-இந்த நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் வருகையினால் வடக்கு மீனவர்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகள் யுத்தம் மற்றும் ஏணைய காரணங்களினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
-இந்த நிலையில் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேலும் ஒரு படிமுறையாக ஆன்மீக தலைவர்கள் துறைசார் நிபுணர்கள் மற்றும் மக்கள் பிரச்சினைகளில் அக்கரையுடன் செயற்படும் செயற்றிரனாளிகளோடு இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகளை கண்டறிவதற்கான முக்கிய கலந்துரையாடல் ஒன்றை எதிர் வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் பி.ப 1 மணிவரை மன்னார் கொலிடே விடுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் தேசிய அமைப்பாளர் ஹர்மன் குமார தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
July 12, 2012
Rating:

No comments:
Post a Comment