16478 பட்டதாரிகளுக்கு அரச சேவை நியமனம்;; ஆறுமாத பயிற்சியை பூர்த்தி செய்தோர் தெரிவு
16,478 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனங்களை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டத்தின் பேரில், ஆறு மாத பயிற்சியைப் பூர்த்தி செய்த பட்டதாரிகள், இதற்காகத் தெரிவு செய்யப்படுவர்.
இவர்களுக்கு செப்டம்பர் 01 ஆம் திகதியிலிருந்து தமது அமைச்சினால் நியமனம் வழங்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய சேவை நிபந்தனைகளின் கீழ் பொது நிர்வாக அமைச்சினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அனுப்பப்படும் வண்ணம் இவர்கள் சேர்க்கப்படுவர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு சேர்க்கப்படும் பட்டதாரிகளின் செயற்பாடுகள் பற்றி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்களுக்கும் உதவிப் பணிப்பாளர்களுக்கும் அறிவூட்டப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
உல்லாச பிரயாண ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் செயலமர்வு நடைபெற்றது.
சேர்க்கப்படும் பட்டதாரிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கும் அபிவிருத்தி பயணத்துக்கும் பங்குதாரர்களாக இருப்பர்.
இதுவே பிரதான எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கிராம மக்களின் கருத்துக்களை அரசுக்கு எடுத்துவரும் இலகுவான மார்க்கமாக இப்பட்டதாரிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிகாரிகள் மக்களில் இருந்து இன்று தூரமாகி உள்ளனர். அவர்களின் செயற்பாடுகள் சுற்றறிக்கைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் உட்பட்டு உள்ளன. மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவது தெரியவில்லை.
எனவே புதிதாகச் சேர்க்கப்படும் பட்டதாரிகள் மக்களுடன் இருப்பர்.
மக்களின் உணர்வுகளை நம்மிடம் கொண்டு வரும் நபர்களாக அவர்கள் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பொருளாதாரத்தை பலப்படுத்தவே ஜனாதிபதி இந்த அமைச்சை உருவாக்கினார். அவரின் உயரிய இலட்சியங்களை நிறைவேற்றுவதே இந்த அமைப்பின் பொறுப்பாகும்.
கிராம மட்டத்தில் எமக்கு ஓர் அதிகாரி உள்ளார். அவரே சமுர்த்தி அதிகாரி.
செப்டம்பர் 01 முதல் சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் எமது அமைச்சின் அதிகாரி ஒருவர் அந்த வலையமைப்பிலேயே எமக்குக் கிடைப்பார் என்றார்.
அமைச்சின் மேலதிகச் செயலாளர் சந்திரா விக்ரமசிங்க, கண்ணி வெடி அகற்றும் ஒன்றியத்தின் பணிப்பாளர் மொன்டி ரணதுங்க திவிநெகும பணிப்பாளர் ஜயதிலக்க ஹேரத் உட்பட பலர் பங்கு பற்றினர். (எப். எம்.)

Reviewed by NEWMANNAR
on
August 21, 2012
Rating:

No comments:
Post a Comment