வங்காலையில் தனியாரின் காணிகள் வீதிக்காக ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிப்பு.

குறித்த பகுதியில் உள்ள அரச அலுவலகர் காணி எல்லைகளைப்பிடுங்கியும்,தமது வீட்டு மதிலை வீதியில் 3,4 அடி இடத்தை பிடித்து மதிலை கட்டியும் உள்ளனர்.
குறித்த வேலையில் ஈடுபட்டதும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள மக்களின் சொந்தக்காணியில் பாதை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த செய்பாடுகளில் அப்பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் ஒருவர் காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச அலுவலகத்தில் இருக்கவேண்டிய வங்காலை கிராமத்தின் வரைபடத்தை யுத்த காலத்தின் போது குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருபவர்கள் தன்வசம் வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்த படி பாதைகளை வரைந்து வங்காலை பிரதேச சபையையும்,சானாட்டான் பிரதேச சபையையும்,நாணாட்டான் பிரதேச செயலக அதிகாரிகளையும் ஏமாற்றிக்கொண்டு இவர் செயற்பட்டு வருவதாகவும் பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மன்னார் நகர நிருபர்
வங்காலையில் தனியாரின் காணிகள் வீதிக்காக ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிப்பு.
Reviewed by NEWMANNAR
on
August 20, 2012
Rating:

No comments:
Post a Comment