மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கு
ஒரு குற்றவாளி தப்பி விடலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது-சட்டத்தரணி என்.எம்.சகீத்.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைதாகி இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் அதிகமானவர்கள் அப்பாவிகள் என சட்டத்தரணி என்.எம்.சகீத் தெரிவித்தார்.
மன்னார் நீதிமன்றமகட்டிடம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 13 ஆம் திகதி(13-08-2012) திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற போதே அன்றைய தினம் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகி பிணைக்கான விண்ணப்பத்தினை முன்வைத்து சமர்ப்பணம் செய்த வேளையிலேயே சட்டத்தரணி மேற்படி தெரிவித்தார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்காக இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழு விசேடமாக பாணந்துறை நீதவான் ஆர்.எஸ்.ஏ.திசநாயக்காவை மன்னார் மேலதிக நீதவானாக நியமித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கினை மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திசாநாயக்க விசாரணை செய்த போது சட்டத்தரணி என்.எம்.சகீத் சந்தேக நபர்களுக்கான பிணை மனுவை சமர்ப்பணம் மூலம் முன் வைத்தார்.
சட்டத்தரணி தனது பிணை மனுவில் மேலும் தெரிவித்ததாவது,,,
கனம் நீதிபதி அவர்களே இன்று கனம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ள 13 சந்தேக நபர்களும் கடந்த யூலை மாதம் 18 ஆம் திகதி மன்னாரில் மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தங்கள் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 20 வருடங்களுக்கு முன் விடுதலைப்புலிகளினால் இம் மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்ஸிம் மக்கள் சொற்ப நேர அவகாசத்தில் இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்டனர்.இந்த நிலையில் இடம் பெயர்ந்த முஸ்ஸிம்கள் நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் குடிசைகளிலும்,கொட்டகைகளிலும் மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் சுமார் 20 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் நாட்டின் யுத்தம் முடிந்த நிலையில் மீண்டம் தமது மாவட்டத்திற்கு திரும்பி வந்து தமது வாழ்வை மீள ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் கோந்தைப்பிட்டியில் உள்ள இறங்கு துறையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள வேறு பகுதி மீனவர்களினால் பாதிப்பு ஏற்பட்டு அது பிணக்காகி பின்னர் குறித்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில் நீதிமன்றம் இது தொடர்பில் வழங்கிய தீர்ப்பில் திருப்தியற்ற நிலையில் அது ஆர்ப்பாட்டமாக மாறியது.
-இந்த ஆர்ப்பாட்டத்தை மன்னார் பொலிஸாரின் அறிக்கையின் படி 400 இற்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,பெரியோர்கள் என பலதரப்பட்டோர் நடாத்தியுள்ளனர்.
-இந்த வழக்கில் முதலாம் சந்தேக நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஒரு சிகையலங்காரம் செய்வதை தொழிலாக கொண்டவர்.மேலும் 2 ஆம்,4 ஆம்,5ஆம்,7 ஆம்,10 ஆம்,15 ஆம் சந்தேக நபர்கள் மன்னார் நகரில் சிறு வியாபாரங்கள் செய்பவர்கள்.
அத்துடன் 9 ஆம் சந்தேக நபர் கூலித்தொழிலாளியாவார் .மேலும் 8 ஆம் சந்தேக நபர் மணிக்கூடு ,கைக்கடிகாரங்கள் திருத்துபவர்.14 ஆம் சந்தேக நபர் ஒரு சிறைச்சாலை அலுவலகர்.மேலும் சந்தேக நபர்களில் ஒருவர் தொழில் நுட்பவியலாளராக பணிபுரிபவர்.இந்த நிலையில் சந்தேக நபர்களில் எவரும் மீனவர்கள் இல்லை.
-அத்துடன் இவர்கள் கடந்த 18 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களும் இல்லை.
-மன்னார் நகர மத்தியில் நடந்த இவ் ஆர்ப்பாட்டத்தின் போது கடையில் இருந்தவர்கள்,அன்றைய தினம் கூலி வேலை செய்தவர்கள்,ஆர்ப்பாட்டத்தை அவதானித்துக்கொண்டிருந்தவர்கள்,பாதசாரிகள்,கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு வந்தவர்கள் என இவர்களே சம்பவம் நடந்த பல மணி நேரங்களுக்கு பின்னர் பொலிஸாரினால் எவராவது கைது செய்யப்பட வேண்டும் எனும் காரணத்தினால் கைது செய்யப்பட்டு உங்கள் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நான் கூறும் கூற்றினை மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி இ.கயஸ் பெல்டானோ அவர்களும் கடந்த 05-08-2012 அன்று வெளிவந்த சன்டை டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-இதே வேளை குறித்த தினத்தில் வெளிவந்த பத்திரிக்கையில் சட்டத்தரணி இ.கயஸ் பல்டானோ வழங்கியுள்ள பேட்டியில் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த 13 பேர்களில் மூவரைத்தவிர ஏனைய 10 பேரூம் பாதசாரிகள் ஆவர் என தெரிவித்தார்.
மேலும் இச்சந்தர்ப்பத்தில் ஒரு உண்மை புலப்படுகின்றது.400 பேருக்கு மேல் எண்ணிக்கையானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கைதாகியுள்ள 13 பேர்களும் இது வரை எந்தவொரு அடையாள அணிவகுப்பிற்கும் உற்படுத்தப்படவில்லை.அத்துடன் இந்த சந்தேக நபர்களில் இருவர் சம்பவ தினம் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களும் கைதாகி இன்று நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளனர்.எனவே மரியாதைக்குரிய ய நீதவான் அவர்களே குறித்த சந்தேக நபர்கள் மீனவர்கள் இல்லை.மேலும் 20 வருட அகதி வாழ்விற்கு பின்னர் தமது மாவட்டத்தில் தமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.மேலும் மன்னாரில் இவர்கள் வறுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
-இந்த நிலையில் சந்தேக நபர்களின் குடும்பங்களும் மிகவும் வறிய நிலையிலேயே உள்ளனர்.அத்துடன் சந்தேக நபர்களின் உழைப்பை நம்பியே அவர்களின் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர்.
-அத்துடன் சந்தேக நபர்களின் எவரேனும் முன்பு வேறு எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை. இந்த நிலையில் கடந்த 18.07.2012 இல் அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் நோன்பு காலமாகையினால் சந்தேக நபர்கள் சிறையிலேயே நோன்பு நோற்று வருகின்றனர்.
-எனவே மன்னார் சட்டத்தரணி சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி இ.கயஸ்பெல்டானோ வின் நேர்மையான வெளிப்படையான கருத்தின் படி இங்கு உங்கள் முன் நிருத்தப்பட்டள்ள சந்தேக நபர்களில் 10 பேர் எந்தக்கற்றத்தையும் செய்யாதவர்கள் என்று நன்கு தெரிய வருகின்றது.
-சட்டம் எதைக்கூறுகின்றது என்றால் ஒரு குற்றவாளி தப்பி விடலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று.
எனவே பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தமை எனும் குற்றச்சாட்டில் இங்கு நிறுத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களை விசேட காரணங்களினால் பிணையில் விடுவிக்க அதிகாரம் இம்மன்றுக்கு உள்ளது.
-மேலும் எவ்வித குற்றமும் புரியாதவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருப்பது நல்ல விடையமில்லை.எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர்களுக்கு எதிரான உறுதியான சாட்சியங்கள் இல்லாததினால் கௌரவ மன்றினால் விடுக்கப்படுகின்ற அனைத்து நிபந்தனைகளுக்கும் ஏற்றவாறு பிணை வழங்குமாறு கனம் மன்றை கோருகின்றேன் என சட்டத்தரணி என்.எம்.சகீத் தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Reviewed by NEWMANNAR
on
August 16, 2012
Rating:

No comments:
Post a Comment