அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் புதிய கிரிக்கெட் புரட்சி- MPL 2012 - படங்கள் இணைப்பு

சூரியன் F.M, வீரகேசரி ஆகியவற்றின் ஊடக அனுசரனையுடனும் Singer Plus, TVS,நியு சிவா பிறதர்ஸ் ஹோட்டல், HNB Assurance,  IT Platform ஆகியவற்றின் இணை அனுசரனையுடனும் மன்னார் பெரியகடை 'ஸ்டார் ஈகிள்' விளையாட்டுக்கழகம் மன்னார் மாவட்டத்தின் கிரிக்கெட் வளர்ச்சி கருதி தொடர்ந்து இரண்டாவது முறையாக பெருமையுடன் நடாத்தும் பிரமான்டமான MPL 2012(மன்னார் பிறிமியர் லீக்)  கிரிக்கெட் சுற்றுப்போட்டி நாளை (18-08-2012) வெகு கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
மேலும் இவ் MPL 2012 போட்டியானது 2012-08-18ம் திகதி ஆரம்பித்து 2012-08-09ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தமாக 40 போட்டிகளை கொண்ட இப்போட்டியில் மன்னார் மாவட்டத்தின் முன்னனி அணிகளான ஸ்டார் ஈகிள், சென்.விக்டறிஸ், சென்.அன்ரனிஸ், சென்.ஜோசப், இந்து முன்னனி, யங்ஸ்டார், ஏசியன், கிறீன் பீல்ட் ஆகிய அணிகளும் கிளிநொச்சி மாவட்ட அணியும் இதில் களம்காணவுள்ளது.
நாளை நடைபெறவிருக்கும் முதலாவது போட்டியில் ஏசியன் அணியை எதிர்த்து கிறீன்பீல்ட் அணியும் இரண்டாவது போட்டியில் சென்.விக்டரிஸ் அணியினை எதிர்த்து கிளிநொச்சி அணியும் மூன்றாவது போட்டியில் சென்.ஜோசப் அணியை எதிர்த்து இந்து முன்னனி அணியும் நான்காவது போட்டியில் ஸ்டார் ஈகிள் அணியை எதிர்த்து கிளிநொச்சி அணியும் மோதவுள்ளது.

ஆரம்பித்து இரண்டாவது வருடத்திலேயே மிகப்பெரிய வரவேற்ப்பைபெற்ற இவ் MPL 20122012 போட்டியின் ஆரம்ப நிகழ்வானது பிரமாண்டமான முறையில் கடந்த 2012-07-08ம் திகதி நடைபெற்றது. (அதன் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)












மன்னார் மாவட்டத்தின் புதிய கிரிக்கெட் புரட்சி- MPL 2012 - படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on August 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.