மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர் வற்றியுள்ளமையினால் 162 குளங்கள் பாதிப்பு.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 162 குளங்களுக்கு நீரை வழங்கும் மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர் வற்றிய நிலையில் உள்ளது.
கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டத்தினை தற்போது அளவிட முடியாத நிலையில் உள்ளதாக முருங்கன் நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை மன்னார் மாவட்டத்தில் 9.8 மில்லி மீற்றர் மழை வீ ழ்ச்சியே மன்னார் மாவட்டத்தில் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் மழை பெய்யாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது நாட்டில் எல்லாப்பாகங்களிலும் ஏற்பட்டுள்ள வரட்சிதற்போது மன்னார் மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கட்டுக்கரை குளத்தை நம்பி இம்முறை நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நீரைதற்போது பெற்றுக்கொள்ள பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது கட்டுக்கரை குளத்தின் நீரை நம்பி 24440 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நகர செய்தியாளர்
மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர் வற்றியுள்ளமையினால் 162 குளங்கள் பாதிப்பு.
Reviewed by NEWMANNAR
on
August 18, 2012
Rating:

No comments:
Post a Comment