அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் வசந்தம் இலவச மின்சார திட்டம்-ஏமாற்றப்பட்டு வரும் பரப்பாண் கண்டல் கிராம மக்கள்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரப்பாண்கண்டல் கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ள இலவச மின்சாரம் இன்னும் அக்கிராம மக்களின் வீடுகளுக்கு சென்றடையவில்லை என குறித்த கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



கடந்த யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து சென்ற குறித்த பரப்பாண் கண்டல் கிராம மக்கள் மீண்டும் கடந்த 3 வருடங்களுக்கு முன் குறித்த கிராமத்தில் மீள் குடியேறினர்.


இதன் போது அந்த மக்கள் பல்வேறுபட்ட இடப்பெயர்வுகளின் மத்தியில் தமது கிராமங்களுக்கு வந்த போது குறித்த கிராமங்கள் யுத்தத்தினால் கடுமையாக பாதீக்கப்பட்ட நிலையில் பற்றைக்காடுகள் வளர்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மக்கள் தமது முயற்சியினால் குறித்த கிராமங்களை துப்பரவு செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச மின்சாரத்திட்டத்தில் மன்னார் பரப்பாண்கண்டல் கிராமமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கிராமத்தில் சுமார் 350 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அந்த மக்கள் வடக்கின் வசந்தத்தினால் வழங்கப்படவுள்ள இலவச மின்னசாரத்திற்கு விண்ணப்பித்து அந்த கிராம மக்களும் தெரிவு செய்யப்பட்டள்ளனர்.

இந்த நிலையில் அந்த மக்கள் தமது வீடுகளினுள் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுவதற்காண சகல வேலைத்திட்டங்களையும் பூர்த்தி செய்து பல மாதங்களாகின்ற போதும் குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு இது வரை மின் இணைப்பினை வழங்க வில்லை.

தமது வேலைகள் அணைத்தும் பூர்த்தியாக பல மாதங்களாகின்ற போதும் மின்சார சபை அதிகாரிகள் அசமந்தப்போக்குடனே செயற்பட்டு வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடையம் தொடர்பில் மன்னார் மின்சார சபைக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு பல தடவை எடுத்துக்கூறியும் இது வரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.


தற்போது எமது கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காடுகள் காணப்படுவதினால் பாம்பு உற்பட விசப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக அந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியது இருப்பதாகவும் குறிப்பாக அக்கிராமத்தில் சிறுவர்கள் அதிகம் உள்ளமையினால் இரவு நேரங்களில் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை குறித்த கிராமத்தில் பாடசாலை மாணவர்கள் அதிகம் உள்ள போதும் இரவு நேரங்களில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மண்ணெண்னையின் விலை அதிகரித்துள்ளமையினால் இரவு நேரங்களில் விளக்கு கொழுத்துவதற்கு கூட எரிபொருட்களை வேண்ட முடியாத நிலையிலும் அக்கிராம மக்கள் பலர் உள்ளனர்.

எனவே எமது கிராமத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள இலவச மின்சாரத்திட்டத்தை விண்ணப்பித்த மக்களுக்கு உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அக்கிராம மக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டு கோள் விடுத்துள்ளனர்
வடக்கின் வசந்தம் இலவச மின்சார திட்டம்-ஏமாற்றப்பட்டு வரும் பரப்பாண் கண்டல் கிராம மக்கள். Reviewed by NEWMANNAR on August 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.