வாழ்க்கைப் பயணத்தில் வைரவிழாவை எட்டும் போல் நட்சத்திரம் அடிகளார்

- அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்
கத்தோலிக்க திருச்சபையில் குருக்களுக்கான பல்வேறு துறவற சபைகள் உள்ளன. அவற்றிலே ஈழத்தில் முக்கிய – முன்னோடித் துறவற சபையாக அமலமரித்தியாகிகள் சபை விளங்குகிறது. இச்சபையின் யாழ் மாகாண முதல்வர் அருட்திரு போல் நட்சத்திரம் அடிகளார் எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
ஒரு இறைபணியாளர் என்ற வகையில் அவரின் ஆழுமைப் பண்புகளும், செயற்திறமைகளும் விதந்துரைக்கப்பட வேண்டியவை.
யாழ் உரும்பிராய் மண்ணின் முதல் குருமணியாக வந்த அடிகளார் 1952ஆம் ஆண்டு பிறந்தார். திருமறைக்கலாமன்ற இயக்குனர் அருட்திரு. மரியசேவியர் அடிகளார் உரும்பிராய் பங்குத்தந்தையாக இருந்தபோது இவரை சிறிய குருமடத்திற்கு அனுப்பிவைத்தார். நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் அன்புக்குரிய பணித்தளமாகிய உரும்பிராயில் இருந்து சிறந்ததொரு அமலமரித்தியாகி உருவாவார் என அன்று மரியசேவியர் அடிகளார் நினைத்திருந்தாரோ தெரியவில்;லை. ஆனால் அந்த மண்ணில் இருந்து சிறந்த ஆழுமையும் செயற்திறனும் உள்ள ஒரு அமதி உருவாகியுள்ளார் என்பதுதையிட்டு இன்று நாம் மகிழ்ச்சியடையலாம்.
1980ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அடிகளார் மறையுரைஞர் குழுமம், நானாட்டான், வங்காலை, உயிலங்குளம் போன்ற பங்குகள், அமதி குருத்துவ மாணவர்களின் உருவாக்கம், மாகாண நிர்வாகம், கற்பித்தல் பணி போன்ற பல தளங்களில் பல்வேறு பணிகளை சிறப்பாகச் செய்துள்ளார்.
2008ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி அமலமரித்தியாகிகளின் மாகாண முதல்வராக நியமிக்கப்பட்ட அடிகளார் அன்று தொடக்கம் இன்றுவரை காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.
குறிப்பாக போரின் வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கும் வன்னிநிலப்பரப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிள்ளைகளின் கல்வி, ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிப்பு, இளைஞர் உருவாக்கற் பணிகள், இல்லிடமற்றோருக்கான இல்லிடங்ள் என இவரின் வழிகாட்டலில்; அமதிகள் ஆற்றும் பணிகள் மெச்சத்தக்கவை.
அமதிகளின் பணித்தளங்களை விஸ்தரித்துள்ள இவர், போரின் பின்னரான காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய பல பணிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஈழத்தமிழ் திருச்சபையின் முக்கிய தூண்களில் ஒன்றாகத் திகழும் யாழ் மாகாண அமதிகள் இ;ந்த மண்ணில் விசுவாச விதையை விதைத்தவர்களில் முக்கியமானவர்கள். அந்த விசுவாச விதை முளைத்து, வளர்ந்து, பலன்கொடுக்க தொடாந்து அவர்கள் அயராது பணியாற்றுகின்றனர்.
போல் நட்சத்திரம் அடிகளார் சிறந்த ஆழுமைப் பண்புகள் கொண்டவர். அனைத்துத் தரப்பினருடன் உறவையும் தொடர்பையும் ஏற்படுத்தக்கூடியவர். சிறந்த மறையுரையாளர். மடுத்திருப்பதியில் அந்நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைகள் இன்றும் நினைவுகூரத்தக்கவை. செயற்தின்வாய்ந்த நல்ல நிர்வாகி, பழகுவதற்கு இனிமையானவர். ஏழைகள்பால் அன்பும் அக்கறையும், இரக்கமும் கொண்டவர்.
இத்தகைய சிறப்பான ஆழுமையைக் கொண்ட அடிகளாரின் பணி வாழ்வு மேலும் சிறக்கவேண்டும் என இறையாசிகூறி பிறந்த நாள் வாழ்;துக்களை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம்.
வாழ்க்கைப் பயணத்தில் வைரவிழாவை எட்டும் போல் நட்சத்திரம் அடிகளார்
Reviewed by NEWMANNAR
on
August 22, 2012
Rating:

No comments:
Post a Comment