மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் சம்பவம்.-மேலும் 5 பேர் கைது.

-கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு அடையாளம் காணப்பட்ட மேலும் 26 சந்தேக நபர்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துமாறு மன்னார் பொலிஸாருக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தன்வசம் வைத்துள்ள வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வைத்து குறித்த 5 சந்தேக நபர்களையும் கைது செய்து மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் இ.கயஸ்பல்டானோ முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த 5 சந்தேக நபர்களையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மன்னார் நகர நிருபர்
மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் சம்பவம்.-மேலும் 5 பேர் கைது.
Reviewed by NEWMANNAR
on
August 22, 2012
Rating:

No comments:
Post a Comment