அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை 2012-(பட இணைப்பு)

கலையருவி' எனப்படும் மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரை 2012 நிகழ்வும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா ஆரம்ப வைபவமும் நேற்று வியாழக்கிழமை (02.08.2012) மாலை 2.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.



இந்நிகழ்வுக்கு கலையருவியின் இயக்குனரும் மன்னார் சர்வமதப் பேரபையின் தலைவருமான அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தலைமை தாங்குகினார்.

குறித்த நிகழ்வுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் முன்னிலை வகித்தார். 

  தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபரும், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் வழங்கினார்.

 'தமிழ் மொழியின் எதிர்காலம்' என்ற தலைப்பில் இந்நினைவுப் பேருரை இடம்பெற்றது.

 இந்நிகழ்வின் வரவேற்புரையை மன்- சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு. ஜ. தயானந்தராஜா அவர்கள் நிகழ்த்தினார்.

 மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட் அவர்கள் தனிநாயகம் அடிகளாரின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றினார்;. 

இந்நிகழ்வில் மன்னார் தழல் இலக்கிய வட்டத்தின் கவியரங்கமும், பாடசாலை மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

 தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாத் தொடர்பாக கருத்துத் தெரிவித்த தமிழ் நேசன் அடிகளார் கூறியதாவது, 

 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்ற பாரதியின் கனவை நனவாக்கியவர் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார்.

 தமிழுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த தமிழ்த்தாயின் தலைமகன். அடுத்த ஆண்டு இதே தினத்தில் (02.08.2012 – 02.08.2013) அன்னாரின் நூற்றாண்டு விழாவை தமிழ் கூறும் நல்லுலகம் பெருவிழாவாகக் கொண்;டாடவுள்ளது.





 இந்நூற்றாண்டு விழாவை ஒரு வருடத்திற்கு முன்னர் நாம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
 அதன் முதற்கட்ட முயற்சியாகவே தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரை நிகழ்வை நடாத்தியுள்ளோம் . ஏன குறிப்பிட்டார்.

(மன்னார் நகர நிருபர்- திவ்வியா)
மன்னாரில் இடம் பெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை 2012-(பட இணைப்பு) Reviewed by NEWMANNAR on August 03, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.