அண்மைய செய்திகள்

recent
-

அடிப்படை வசதிகளற்ற நிலையில் முசலி சவேரியார்புரம் புதுக்குடியிருப்பு கிராம மக்கள் அவதி _

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவேரியார்புரம் புதுக்குடியிருப்பு கிராம மக்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்; இடம் பெற்ற போது அக்கிராம மக்கள் பல்வேறு பட்ட அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருவதை தமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் திரு சுனேஸ் தெரிவித்தார்.


இக் கூட்டத்திற்கு முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் தலைவர் திரு ராஜன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் திரு நீக்கிலாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் முசலி பிரதேச பிரஜைகள் குழுவினரிடம் மக்கள் சில பிரச்சினைகளை முன் வைத்து இதற்கான தீர்வினைப் பெற்றுத்தரும்;படி வேண்டுகோள் விடுத்தனா.;

2007ஆம் ஆண்டுமுசலி பிரதேசத்தில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக மக்கள் தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அவர்களின் ஊரை விட்டு வெளியேறினார்கள்.

மீண்டும் 2009 ஆம்ஆண்டு தங்களின் சொந்தக் கிராமத்தில் வந்து குடியேறினார்கள்.

ஆனால் முசலி பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் வடக்கின் வசந்தத்தின் கீழ் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது எமது கிராமமாக சவேரியார்புரமும் உள்வாங்கப்பட்டு படிவங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டன.

ஆனால் எல்லாக் கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கிய வடக்கின் வசந்தம் ஏன் சவேரியார் புர கிராம அதிகாரி பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வழங்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது சம்பந்தமாக பிரதேச செயலாளர், பிரதேசசபைத் தலைவர் மற்றும் வவுனியா வடக்கின் வசந்தத்திற்கான மின்சார சபை ஆகிய அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என முசலி பிரதேச பிரஜைகள் குழுவினரிடம் மக்கள் தெரிவித்தனர்.

இதனைவிட எமது கிராமத்தில் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு மக்காளாகிய நாங்கள் முகம் கொடுத்துக்கொண்டு வருகின்றோம். குறிப்பாக மின்சாரப் பிரச்சினை ,மழை காலத்தில் யானைகளின் அட்டகாசம் ,பொதுக்கட்டிடம் இன்மை,குடி நீர்வசதி இன்மை,ஒழுங்கான வடிகால் இன்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

இப் பிரச்சினைகளை பல அதிகாரிகளிடம் கூறியும் இன்னமும் சரியான பதில் கிடைக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு எதிர்வரும் 15-08-2012 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு அனைத்துப் பணியையும் நிறுத்திவிட்டு மக்கள் முசலி பிரதேச சபை தவிசாளருக்கு மனு ஒன்றினைக் கையளிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் திரு. சுனேஸ் தெரிவித்தார். _
அடிப்படை வசதிகளற்ற நிலையில் முசலி சவேரியார்புரம் புதுக்குடியிருப்பு கிராம மக்கள் அவதி _ Reviewed by NEWMANNAR on August 03, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.