முஸ்லிம்களுக்கு மட்டும் அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களைவழங்கினேனா?நிரூபித்தால் அமைச்சர் பதவியை துறப்பு! ரிசாத் ஆயருக்கு சவால்
மன்னார் ஆயர் மரியாதைக்குரிய ராயப்பு ஜோசப் அவர்கள் நான் 650 அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கியுள்ளேன் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார். அது முற்று முழுதான அப்பட்டமான பொய் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 650 அல்ல ஆறு முஸ்லிம்களுக்கு கூட எந்த நியமனங்களையும் நான் புதிதாக வழங்கவில்லை என்றும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.
தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியொன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
அமைச்சர் றிசாத் தொடர்கையில்,
நான் அப்படியான நியமனங்களை வழங்கியுள்ளேன் என்று ஆயர் நிரூபித்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதுடன் அரசியலில் இருந்தும் ஒதுங்கிவிடுவேன் என்று குறிப்பிட்டார்.
அந்த 650 அரசாங்கத் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களில் 19 தமிழர்களுக்கும், இரண்டு சிங்களவர்களுக்கும் தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மன்னார் ஆயர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மதத் தலைவர் அதுவும் முக்கியமான ஒருவர் இவ்வாறு ஏன் உண்மைக்கு புறம்பானதொன்றை கூறுகின்றார். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறான பிழையான புள்ளி விபரங்களை அவருக்கு வழங்குபவர்கள் எப்படியானவர்களாக இருக்க முடியும். எனக்கும் ஆயர் அவர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்தவித பிரச்சினைகளும் இருந்ததில்லை.
எப்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்ற ஆரம்பித்தேனோ அன்று தான் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.
இதனது பின்னணியில் பல சக்திகள் இருப்பதாக அறிந்து கொள்ள முடிகின்றது. நான் ஒரு முஸ்லிம் என்ற படியாலும், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் என்னோடு இருக்கின்றார்கள் என்ற படியாலும் இந்த அரசாங்கத்தில் ஓர் அமைச்சராக இருக்கின்றவன் என்றபடியாலும் என்னை பழிவாங்கும் ஒரு செயலாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது என்றார்.
முஸ்லிம்களுக்கு மட்டும் அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களைவழங்கினேனா?நிரூபித்தால் அமைச்சர் பதவியை துறப்பு! ரிசாத் ஆயருக்கு சவால்
Reviewed by NEWMANNAR
on
August 26, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 26, 2012
Rating:

No comments:
Post a Comment