அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக முசலி பிரதேச சபை தலைவருக்கு முசலி பிரதேச பிரஜைகள் குழு மகஜர் கையளிப்பு.


கடந்த யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேறியுள்ள முசலி பிரதேச மக்கள் தாம் தொடர்ந்தும் முகம் கொடுத்து வரும் பிரச்சினை தொடர்பாகவும் அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாகவும்  முசலி பிரதேச சபை தலைவரிடம் முசலி பிரதேச பிரஜைகள் குழு மகஜர் ஒன்றை வழங்கி வைத்துள்ளதாக அதன் அமைப்பாளர் அ.சுனேஸ் சோசை தெரிவித்தார்.

 குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,
                                                     சவேரியார்புரம்  புதுக்குடியிருப்பு மக்களின் சார்பாக நாம் பணிவாக வேண்டிக் கொள்ளுவது!

2007-08-31ம் திகதி நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக முசலி பிரதேசத்தில் உள்ள மக்களாகிய இவர்கள்; உயிர்களை காப்பாற்றுவதற்காக இவர்களது ஊரை விட்டு வெளியேறினார்கள்;. 

மீண்டுமாக 2009-04-30 ம் திகதி; சொந்த கிராமமான சவேரியார்புரம்  புதுக்குடியிருப்பு என்னும் கிராமத்தில்  வந்து குடியேறினார்கள்.

ஆனால் முசலி பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் வடக்கின் வசந்தத்தின் கீழ் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது இவர்களுடைய கிராமமான சவேரியார் புரமும் உள்வாங்கப்பட்டு படிவங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது. 

ஆனால் எல்லா கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கிய வடக்கின் வசந்த
ம் ஏன் சவேரியார்புர கிராமத்தின் கிராம அதிகாரி பிரிவிற்குட்பட்ட கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வழங்கவில்லை என மக்கள் ஆகிய நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம்.

இது சம்பந்தமாக பிரதேச செயலாளர் பிரதேசசபை தலைவர் மற்றும்; வவுனியா வடக்கின் வசந்தத்திற்கான மின்சார சபை அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என மக்களால் கூறப்பட்டது. 

இது போக  ஏமது கிராமத்தில் மொத்த வீடுகள் 35 காணப்படுகின்றன.

  தற்போது 20 குடும்பங்களை மையப்படுத்தி 70 நபர்கள் வாழுகின்றார்கள்.

32 சிறுவர்கள் கல்விகற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.கணவனை இழந்து தவிக்கும் பெண்கள் 03பேர் காணப்படுகின்றார்கள்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 03 பேர் காணப்படுகின்றார்கள். 

எமது பிரதான தொழில் மீன்பிடி மற்றும் கூலி வேலைகள் செய்துதான் எமது காலத்தை போக்கிக் கொண்டு வருகின்றோம்.

 அன்றாடம் உழைக்கும் பணத்தினை வைத்துக்கொண்டுதான் சுகாதாரம் கல்வி மருத்துவம் சாப்பாடு மற்றும் ஏனைய செலவினை செய்துக்கொண்டு வருகின்றோம். 

இது போக எமது கிராமத்தில் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு மக்காளாகிய நாங்கள் முகம் கொடுத்துக்கொண்டு வருகின்றோம் எனவும் குறிப்பாக மின்சாரப் பிரச்சினை,மழை காலத்தில் யானைகளின் அட்டகாசம்,பொதுக்கட்டிடம் இன்மை,குடி நீர்வசதி இன்மை,ஓழுங்கான வடிகால் இன்மையும் சீரற்ற வீதியும்,பெண்களின் சுயத்தொழில் வாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதீக்கப்பட்டு வருவதாக மக்களால் கூறப்பட்டது. 

இவ் பிரச்சனைகளை பல அதிகாரிகளிடம் கூறியும் இன்னமும் சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டது. 

கடைசியில் முசலி பிரதேச பிரஜைகள் குழுவினருக்கு கடிதம் மூலம் இவ் பிரச்சினை தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இதனை முன்னிட்டு 15-08-2012 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு தொழில் அனைத்தையும் நிறுத்திவிட்டு எமது கிராம மக்களின் பிரச்சினைக்கு கூடிய உடனடியாக ஒரு நல்ல பதில் பெற்றுத்தர கோரி பிரதேச சபை தவிசாளருக்கு மனு ஒன்றினை கையளிப்பதற்கான தீர்மானத்தினை மேற்கொண்டு குறித்த மணுவை கையளித்துள்ளோம்.


                                                                                              மன்னார் நகர செய்தியாளர் 

முசலி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக முசலி பிரதேச சபை தலைவருக்கு முசலி பிரதேச பிரஜைகள் குழு மகஜர் கையளிப்பு. Reviewed by NEWMANNAR on August 26, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.