அண்மைய செய்திகள்

recent
-

சன்னார் கிராம மக்களது தொடர் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.


மன்னார்  மாவட்டம் சன்னார் கிராம மக்களது தொடர் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. நேற்று17/08/2012 இடம்பெற்ற நிகழ்வொன்றினில் மாந்தை மேற்கு பிரதேச செயலர் ஒவ்வொரு குடும்பத்திற்குமான அரை ஏக்கர் காணியினை தமிழ் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்ததுடன் அதற்கான பெமிட் துண்டுகளையும் வழங்கியிருந்தார். சுமார் 142 குடும்பங்களுக்கான பெமிட் அனுமதி பத்திரமே நேற்று வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் வறிய பின்தங்கிய நிலையினில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு மாற்றிடத்தில் வீடு மலசலகூடமென பல ஆசை வார்த்தைகள் அரசால் கூறப்பட்ட போதும் அவற்றை பொருட்படுத்தாமல் தமது நிலம் தமக்கு வேண்டுமென இப்பகுதி மக்கள் கடைசி வரை போராடியே வந்திருந்தனர். அத்தகைய சூழலில் அவர்களது போராட்டத்திற்கு அரசு இறங்கி வந்து அவர்களது காணியை அவர்களிடமே மீளக் கையளித்துள்ளது.
குறித்த காணி விவகாரமே மன்னார் ஆயருக்கும் அமைச்சர் றிசாத் பதியூதீனுக்கும் இடையேயான முறுகல் நிலைக்கும் வித்திட்டிருந்தது. பரஸ்பரம் இரு தரப்புகளும் முட்டிமோதும் நிலையை அடைநதிருந்ததும் அனைவரும் அறிந்ததே. எனினும் மன்னார் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக றிசாத் மீதான நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.
சன்னார் கிராம மக்களது தொடர் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. Reviewed by NEWMANNAR on August 19, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.