மன்னார் மாணவனும்,பயிற்றுவிப்பாளரும் ஈரான் பயணம்.
40 ஆவது ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுப்பிரிவினருக்காண உதைப்பந்தாட்டப்போட்டியானது ஈரான் நாட்டில் கிஸ் தீவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி (13-10-2012) முதல் 28 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ள நிலையில் குறித்த போட்டியில் கலந்து கொள்ளுவதற்காக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ஒருவரும்,அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவரும் குறித்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஈரான் செல்லவுள்ளனர்.
குறித்த சர்வதேச போட்டியில் சகல ஆசிய நாடுகளும் கலந்துகொள்ளவுள்ளது.
இலங்கை அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கால்லூரி மாணவன் கில்மன் சொய்சா அவர்களும்,இலங்கை தேசிய அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளரும்,இப் பாடசாலையின் ஆசிரியருமான ப.ஞானராஜ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
-இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இலங்கை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.
ஞானராஜ் அவர்கள் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் 1999 ஆம் ஆண்டில் பயிற்றப்பட்ட உடற்கல்வி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
அவ்வருடத்திலேயே 19 வயது அணியை இலங்கையில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டியில் முதல் முறையாக 2 ஆம் இடத்தை பெற்று வரலாற்றில் இடம் பிடிக்கச் செய்தார்.
-அன்றில் இருந்து இன்று வரை இக்கல்லூரியானது 17,19 வயது அணிகள் உதைப்பந்தாட்டப்போட்டியில் தொடர்ச்சியாக பல்வேறு சாதணைகளை நிலை நாட்டி வருகின்றது.
-இவ் பயிற்றுவிப்பாளரால் பயிற்றப்பட்ட இக்கல்லூரியைச் சேர்ந்த அணி 2004 ஆம் ஆண்டு இலங்கையைப்பிரதிநிதித்துவப்படு த்தி தென்கொரியா சென்று சர்வதேச போட்டியில் சிறந்த பெறுபேற்றை பெற்று தாய் நாட்டிற்கு பெருமையை தேடிக்கொடுத்துள்ளனர்.
இலங்கை தேசிய அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளரும்,இப் பாடசாலையின் ஆசிரியருமான ப.ஞானராஜ் அவர்கள் ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுவிப்பு அனுமதிப்பத்திரத்திற்காண சி,வி தரத்தை பெற்றுள்ளார்.
-ஞானராஜ் அவர்கள் உடற்கல்வி ஆசிரியராகவும்,உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும்,இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேலனத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளராகவும்,இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தரம் 2 உடைய சிறந்த நடுவராகவும் தனது வாழ்வை உதைப்பந்தாட்டத்துக்கென அர்ப்பணித்து சேவையாற்றி வருகின்றார்.
-இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தாய்த்திருநாட்டின் அணியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் ஒன்று கூட்டி தொடர் பயிற்சியை வழங்கி ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஈரான் சென்று 28 ஆம் திகதி வரை இடம் பெறும் ஆசியப்போட்டிகளில் கலந்து கொண்டு 30 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.
மன்னார் நகர செய்தியாளர்
மன்னார் நகர செய்தியாளர்
மன்னார் மாணவனும்,பயிற்றுவிப்பாளரும் ஈரான் பயணம்.
Reviewed by NEWMANNAR
on
August 26, 2012
Rating:

1 comment:
all the bst sir...........
Post a Comment