அண்மைய செய்திகள்

recent
-

நீதிவானை பாராளுமன்றில் விமர்சிக்க முடியாது!- அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அரசதரப்பு எம்.பி எச்சரிக்கை

மன்னார் மாவட்ட நீதிபதி குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று சபையில் உரையாற்றியபோது, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின்படி நீதித்துறை அதிகாரியொருவரின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேச முடியாது என அரசதரப்பு எம்.பி ஜனக பண்டார எச்சரித்தார்.
மன்னார் மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியவேளை, சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார மேற்கண்டவாறு எச்சரித்தார்.
ஜனக பண்டார முன்னாள் நீதிபதியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார பல தடவை எச்சரித்தார். எனினும் தான் நீதித்துறை அதிகாரிகளை மதிப்பதாக கூறினார்.
ஆனால், எந்தவொரு நபரும் தீர்ப்பொன்று குறித்து திருப்தியடையாவிட்டால் அதைவிட உயர்ந்த நீதிமன்றத்திடம் மேன்முறையீடு செய்யலாம் எனவும் அவர் கூறினார்.
மன்னார் சம்பவம் குறித்து அமைச்சர் பேசிய அனைத்தையும் ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதாக சபைக்குத் தலைமை தாங்கிய ஜனக பண்டார அறிவித்தார்.
நீதிவானை பாராளுமன்றில் விமர்சிக்க முடியாது!- அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அரசதரப்பு எம்.பி எச்சரிக்கை Reviewed by NEWMANNAR on August 09, 2012 Rating: 5

1 comment:

akkarainewsline said...

பாராளுமனறம் என்பத சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது.அதே வேளை பாராளுமன்றத்தில் எந்த உரையினையும் உறுப்பினர்கள் ஆற்றுகின்ற போது,ஒழுங்கு பிரச்சினைகள எழுப்பப்படம் அப்போதுசபைக்கு தலைமை தாங்குபவர் அதனை ஏற்றுக் கொள்வார் அல்லது நிராகரிப்பார்.அது ஹன்சாட்டடில் வரலாம்,அல்லாது வராமலும் போகலாம்.அன்றைய தினம் சபையில் அமைச்ர றிசாத் 40 நிமிடம் உரையபற்றியுள்ளார்இஅதனது ஹ்னசாரட் வந்திருக்கின்றது அதனை பிரசுரத்திற்கு தாங்கள் எடுத்துக் கொள்ளவதன் மூல் இன்னும் பல விடயங்களை வாசகர்களுக்கு வழங்கலாம்.என்பது எனது தாழ்மையான ஆலோசனையாகும்...

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.